இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்றவர்களுக்குத்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணியிடம்தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகவும் செம்மையாகவும் செயற்படுத்திட அனைத்து மாவட்டங்களிலும் தமிழாய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பெற்றனர். மாவட்டங்களிலுள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களின் அமைப்பானதுதமிழாய்வு அலுவலர் அலுவலகம் எனவும்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் எனவும் வெவ்வேறு வகையில் அமைந்திருந்தன. அலுவலர், பணியாளர் அமைப்பும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டிருந்தது. ஆட்சிமொழித் திட்ட ஆய்வுப்பணிகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் அமைய வேண்டியதைக் கருத்திற்கொண்டு, 1997-98ஆம் ஆண்டுகளில் அரசு முனைப்பான நடவடிக்கைகளையெடுத்து, அலுவலகக் கட்டமைப்பில் சீராக்கம் செய்துதமிழ் […]