தமிழ்நாடு நாள்

தமிழ் வளர்ச்சித் துறையின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பில் தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்ட 01.11.1956 ஆம் நாளினை பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் நாள் “தமிழ்நாடு நாள்” என்ற பெயரில் கொண்டாட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இவ்வறிவிப்பினைத் தொடர்ந்து 01.11.2019 அன்று தமிழ் வளர்ச்சித் துறையால் “தமிழ்நாடு நாள்” கொண்டாடப்பெற்றது.