மொழிப்போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறந்து வைப்பு-
“சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.1.2025) தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரின் நினைவிடம் 34 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைத்தார். தமிழ் மொழி, நீராலும் – நெருப்பாலும், […]
அய்யன் திருவள்ளுவர் திருநாள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.1.2025) திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், […]
சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகள்
கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கி, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் […]
அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் (தமிழ்) – மக்கள் பதிப்பு வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு வே.ராஜாராமன். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை […]