செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டம் – பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளில் நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி,கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசுத்தொகை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் – ஜவகர்லால் நேரு அவர்களின்பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பரிசுத் தொகையும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பெற்றன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அமெரிக்காவின் ஸூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 3 இலட்சம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்புத் தொகையான 2 கோடியே 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட அரசுப் பணியாளர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், முனைவர் ந. அருள் அவர்கள் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர், பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் நடத்தப்பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காசோலை, பாராட்டுச் சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியர் திரு.சா.ப.அம்ரித்,இ.ஆ.ப., அவர்களால் வழங்கப்பெற்றன.
திண்டுக்கல் மாவட்டம் – தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று பள்ளி மாணவ மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி இனிதே தொடங்கியது.