செய்திகள்

கரூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.
சிவகங்கை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பொன்னாடை அணிவித்தும் நூல் பரிசும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றனர்.
விருதுநகர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுதொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.
தேனி மாவட்டம் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு ஆட்சிமொழிக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கிவைத்து, சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதியமைக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்கள்.
திருப்பூர் மாவட்டம் – முத்தமிழ் அறிஞர் கலைஞர், அண்ணல் அம்பேத்கர் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அரசின் சார்பில் நடைபெற்ற “தமிழ்நாடு நாள்” விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கலந்து கொண்டனர்.
“தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு தமிழன்னை திருவுருவப்படத்திற்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.