All posts by Tamil Valarchi Thurai

செங்கல்பட்டு மாவட்டம் : சிறந்த மாவட்ட நிலை அலுவலகத்திற்கு கேடயமும், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
கன்னியாகுமரி மாவட்டம் : அண்ணல் காந்தியடிகள், ஜவஹர்லால் நேரு பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் புதுதில்லி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 2021-ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமைச்செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மறைந்த தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம் – ஜவகர்லால் நேரு பிறந் நாளையொட்டி பள்ளி – கல்லூரி மாணவர்களிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில்வெற்றி பெற்றவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.