போட்டி விதிமுறைகள்
1. | போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் போட்டி நாளன்று 9.00 மணிக்குள் தங்கள் வருகையை பதிவு செய்திடல் வேண்டும். |
2. | இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தை நிறைவு செய்து பள்ளித் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சித் துணை/உதவி இயக்குநரிடம் நேரில் அளிக்கப்பட வேண்டும். |
3. | ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 பேரை மட்டும் தெரிவு செய்து பள்ளித் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர் போட்டிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். |
4. | ஒரு மாணவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். |
5. | இதற்கு முன்பு இப்போட்டிகளில் பங்கேற்று ஒரு மாணவர் / மாணவி தொடர்ந்து ஒரே போட்டியில் பங்குபெற்று இரண்டு முறை பரிசுகள் பெற்றிருப்பின் மீண்டும் அதே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார். |
6. | போட்டிகள் காலை 10.00 மணியளவில் தொடங்கும் |
7. | மாவட்ட அளவிலான பரிசுத் தொகை முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு கவிதைப் போட்டி – ரூ.10,000/- ரூ.7,000/- ரூ.5,000/- கட்டுரைப் போட்டி – ரூ.10,000/- ரூ.7,000/- ரூ.5,000/- பேச்சுப் போட்டி – ரூ.10,000/- ரூ.7,000/- ரூ.5,000/- |
8. | கவிதை, கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு வெள்ளைத் தாள் வழங்கப்பெறும். |
9. | போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குத் தேநீர், மதிய உணவு வழங்கப் பெறும். |
10. | போட்டிகளுக்கானத் தலைப்புகள் பங்கேற்கும் மாணவர்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப்படமாட்டாது. நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் போட்டி நடைபெறும் நேரத் தொடக்கத்தில் தமிழ் வளர்ச்சி இயக்குநரால் அனுப்பப்பட்ட மூடி முத்திரையிட்ட உறை பிரிக்கப்பட்டு தலைப்பு மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பெறும். |
11. | மூன்று போட்டிகளும் ஒரே நாளில் நடத்தப்பெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும். |
12. | போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குப் பயணப்படி ஏதும் வழங்கப்பட மாட்டாது. |
13. | மாநில அளவிலான போட்டிகள் பற்றிய விவரம் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநரால் பின்னர் அறிவிக்கப்பெறும். |
14. | மாநில அளவிலான பரிசுத் தொகை முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு கவிதைப் போட்டி – ரூ.15,000/- ரூ.12,000/- ரூ.10,000/- கட்டுரைப் போட்டி – ரூ.15,000/- ரூ.12,000/- ரூ.10,000/- பேச்சுப் போட்டி – ரூ.15,000/- ரூ.12,000/- ரூ.10,000/- |
விண்ணப்ப படிவம்
தமிழ் வளர்ச்சி இயக்குநர்