குயில்போலும் பாட்டுத் தமிழ் வளர்த்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆம் பிறந்தநாள், தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர் எண்மருக்கும் பொன்னாளாக மிளிர்ந்தது.
ஆமாம், அன்று கண்காணிப்பாளர் எண்மருக்கு உதவி இயக்குநர்களாகப் பதவியுயர்வு 2023-2024 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலுக்கான தெரிவு செய்யப்பட்டோர் அரசாணைகள் வழங்கப்பெற்றன.
10.8.2022க்குப்பிறகு 29.4.25 அன்று எட்டுப்பேர் எட்டிய இலக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
தமிழ்நாடு அரசின் சார்பினில்
( 30. 4. 2025 ) திருவல்லிக்கேணி –
மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் நடைபெற்ற தமிழ் வார விழாப் பாட்டரங்க நிகழ்ச்சியில்,
தமிழ் வளர்ச்சித்துறையில் பதவி உயர்வு பெற்ற புதிய ஏழு மகளிர் மற்றும் ஒரு ஆடவர் உதவி இயக்குநர்களாக
1.திருமதி வே சாந்தி,
2.திருமதி சி. சுகன்யா,
3.திருமதி செ. சீலா செபரூபி , 4.திருமதி செ. கனகலட்சுமி , 5.திருமதி க.பாப்பா லட்சுமி ,
6.திருமதி ரா. சிவசங்கரி
7.திருமதி மு. சுப்புலெட்சுமி
8.திரு. எ. பழனி
பெருமகிழ்ச்சியுடன் பாட்டரங்கினில் பாடிய பாவலர்களுடன் மகிழ்ந்து நின்ற வண்ணம் காட்சித்தரும் ஒளிப்படம் பார்வைக்குப்பரிசாகவும்
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
என்ற அடிகள் வாழ்வின் நெறிகளாக ஒளி வீசுகின்றன.
அலுவலர் எண்மரையும் வாகை மலர்களால் வாழ்த்தி மகிழ்வோம்