தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி (2024-2026) தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கீ.சினிவாசன். உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்), திரு.எ.நல்லதம்பி (திருப்பத்தூர்), திரு.எம்.கே.மோகன் (அண்ணாநகர்), திரு.எம்.சக்கரபாணி (வானூர்), திரு.எஸ்.ஜெயக்குமார் (பெருந்துரை), திரு.சா.மாங்குடி (காரைக்குடி), திரு.இரா.அருள் (சேலம் (மேற்கு) ஆகியோர் முன்னிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகக் கூட்டரங்கில் இன்று (25.04.2025) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், அரசு உறுதிமொழி குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட பதில்களின் அடிப்படையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு. நிறைவடைந்த பணிகள் குறித்த பதிலைப் பெற்று, நிலுவையில் இருந்த மனுக்கள் முடித்து வைக்கப்பட்டன. மேலும், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளின் நிலை குறித்து உறுதிமொழிக் குழுத் தலைவர், சட்டப்பேரவைச் செயலர் மற்றும் குழு உறுப்பினர்கள் ஆகியோர் விரிவான ஆய்வு மேற்கொண்டு, அப்பணிகளை விரைவாக முடிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும், சென்னை மாவட்டம் தொடர்புடைய உறுதிமொழிகள் மற்றும் பேரவையில் அளிக்கப்பட்ட அறிவிப்பில் நடவடிக்கையில் உள்ள உறுதிமொழிகளின் மீதான பதில் அறிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், தமிழ்நாடு சட்டன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு காதுக்கு பின் அணியும் நவீன காதொலி கருவிகள், 2 பயனாளிகளுக்கு திறன் பேசிகள், மாவட்ட ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரங்கள் என 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.82,522/- மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. ஆர். டி. சேகர் (பெரம்பூர்), திரு. இ. பரந்தாமன் (எழும்பூர்), திரு. கா. கணபதி (மதுரவாயல்), திரு. எபினேசர் ஜே. ஜே.(எ) ஜான் எபினேசர் ஜெ (டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர்), திரு. ஜே. எம். எச். ஹசன் மௌலானா (வேளச்சேரி), திரு.ஐட்ரீம் இரா. மூர்த்தி (இராயபுரம்), திரு. ஏ. எம். வி. பிரபாகரராஜா (விருகம்பாக்கம்), மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.மு.மகேஷ்குமார். பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப, சென்னை மாநகர காவல் இணை ஆணையாளர் (வடக்கு) திரு.எம்.மனோகர், இ.கா.ப., மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் திரு.ந.இராமலிங்கம், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சு.கீதா உட்பட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.