இன்று (17.03.2025) சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் விரைவில் திறக்கப்படவுள்ள சர். ஜான் ஹுபர்ட் மார்ஷல் அவர்களது திருவுருவச் சிலை அமைக்கும் பணியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் திருமதி கவிதா ராமு, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
17
March