இன்று (07.01.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்த்தாய் விருது – தென்காசித் திருவள்ளுவர் கழகம், கபிலர் விருது – கவிஞர் முத்தரசன், உ.வே.சா விருது – முனைவர் ஆ. இராமநாதன், கம்பர் விருது – முனைவர் ம.பெ. சீனிவாசன், சொல்லின் செல்வர் விருது – முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா, உமறுப்புலவர் விருது – திரு. தா. சையது காதர் ஹீசைன், ஜி.யு. போப் விருது – முனைவர் வெ. முருகன், இளங்கோவடிகள் விருது – முனைவர் சிலம்பு நா. செல்வராசு, அம்மா இலக்கிய விருது – முனைவர் சரளா இராசகோபாலன், சிங்காரவேலர் விருது – திரு. மு. சுப்பிரமணி, அயோத்திதாசப் பண்டிதர் விருது – முனைவர் மு. சச்சிதானந்தம், மறைமலையடிகளார் விருது – புலவர் இராமலிங்கம், அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் பா. அருள்செல்வி, காரைக்கால் அம்மையார் விருது – முனைவர் கி. மஞ்சுளா, சி. பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது – சட்டக் கதிர் (ஆசிரியர் – முனைவர் வி.ஆர்.எஸ்.சம்பத்), முதலமைச்சர் கணினித் தமிழ் விருது – முனைவர் இரா. அகிலன் ஆகியோருக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை திருமதி பிரபா ஸ்ரீ தேவன், திரு. சீனி இராச கோபாலன், திரு. இந்திரன் (எ) பி.ஜி. இராஜேந்திரன், திருமதி அலமேலு கிருஷ்ணன், திரு. ருத்ர துளசி தாஸ் (எ) இளம் பாரதி, பேராசிரியர் க. முத்துச்சாமி, திரு. நடராஜன் முருகையன், திரு. நிர்மாலயா (எ) எஸ். மணி, திரு. இ. பா. சிந்தன், திருமதி கௌரி கிருபானந்தன் ஆகியோருக்கும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.