செய்திகள்

தமிழறிஞர்கள் ஒன்பதின்மரின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் – நூலுரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களால் 2024-25ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை
(ரூபாய் 90.00 இலட்சம்) வழங்கப்படவுள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதில் முத்தமிறிஞர் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 140 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு 9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற பின்பு நாளிதுவரை 22 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.2.85 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2024-25ஆம் ஆண்டில் இலக்கிய இலக்கணப் படைப்புகளாகவும் ஆய்வாகவும் தமிழன்னைக்குத் தொண்டறம் பூண்டு வாழ்ந்து மறைந்த தமிழறிஞர்களின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் வாழும் தமிழறிஞர்களான

முனைவர் ஆறு.அழகப்பன் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையும்,

முனைவர் இராமலிங்கம் (எ) எழில்முதல்வன் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (27 நூல்கள்) நாட்டுடைமையாக்கி ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையும்

மற்றும்

மறைந்த தமிழறிஞர்களான முனைவர் சோ.சத்தியசீலன் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திருமதி தனபாக்கியம் சத்தியசீலன்
அவர்களுக்கு ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையும்.

முனைவர் மா.ரா.அரசு
அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (7 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின்
மரபுரிமையரான திருமதி அ திரிபுரசுந்தரி அவர்களுக்கு ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையும்,

பாவலர் ச.பாலசுந்தரம் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும்
(29 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையர்களான திரு.பா.மதிவாணன், திருமதி பாதமிழ்மணி ஆகிய இருவருக்கும் சேர்த்து ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையும்,

முனைவர் க.ப.அறவாணன் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (136 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திருமதி தாயம்மாள் அறவாணன் அவர்களுக்கு ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையும்,

முனைவர் க.த.திருநாவுக்கரசு அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (34 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையர்களான திரு.தி.அம்பலவாணன், திருமதி தி.அவ்வை திருமதி தி.பூங்கோதை ஆகிய மூவருக்கும் சேர்த்து இலட்சத்திற்கான காசோலையும்.

முனைவர் ரூ.10.00 இரா.குமரவேலன் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (8 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திருமதி தமிழரசி குமரவேலன் அவர்களுக்கு 10.00 இலட்சத்திற்கான காசோலையும்,

கவிஞர் கா. வேழவேந்தன் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் (16 நூல்கள்) நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திருமதி பானுமதி வேழவேந்தன் அவர்களுக்கு ரூ.10.00 இலட்சத்திற்கான காசோலையும் என மொத்தம் ரூ.90.00 இலட்சத்திற்கான காசோலைகள்

18.11.2024 (திங்கள்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கத்தில்

மாண்புமிகு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களால்

வழங்கப்படவுள்ளது.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9