செய்திகள்

நூல் வெளியீட்டு விழா

18.9.24 புதன்கிழமை
காலை 11 மணி
சென்னைப்பல்கலைக்கழகம்

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் உரைப்பகுதி

ஒலியலை ஓவியர்கள் என்ற சிறந்த ஆவணத்தினை தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதுப்பெற்ற
முனைவர் வெ நல்ல தம்பி எழுதியுள்ளார்.

ஊடகத்துறைக்கோர் உ வே சா என்று மகாகவி ஈரோடு தமிழன்பன் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

29 கட்டுரைக் கரும்புகளை
212 பக்கத்தில் அருமையாக படைத்துள்ளார்

நூலாசிரியர் நல்லதம்பி எந்தையார் ஔவை நடராசனை விட ஓராண்டு இளையவர் ஆவார்.

எந்த யார்1964 இல்
தில்லி வானொலி நிலையத்தில் வெளியுறவுப் பிரிவில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய காலத்தை பல நிலைகளில் பல மேடைகளில் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் பேரறிஞர் அண்ணாவின் மறைவினை ஒட்டி
உயிரை உருக வைக்கும் இரங்கல் கவிதை சென்னை வானொலியில் 1969 ஆம் ஆண்டில்
ஒலிபரப்பானதை தமிழ் உலகம் கண்ணீரால் உற்றுக்கேட்டதை நாடு நன்கறியும்

ஆகாச வாணி என்ற தொடரை புனைந்தது கவிஞர் தாகூர் அவர்களின் தனிப்புகழாகும்

சென்னை கடற்கரை எதிரில் அமைந்துள்ள சென்னை வானொலி நிலையம் அதற்கு முன் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில் இயங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.

மெல்வில் டெமல்லோ அவர்களின் ஆங்கில உச்சரிப்பினை கேட்டு வியந்து இந்தியப் பிரதமர் நேருப் பெருமகனார் தில்லி வானொலி நிலையத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய நிகழ்வினை அப்பா தன் வரலாறு நூலில் எழுதி இருப்பதை குறிப்பிட விரும்புகிறேன்.