பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் என்று எண்ணும்போதே நமக்குப் பெருமிதத்தால் தமிழ் சிலிர்ப்பு ஏற்படுகிறது.
பேரறிஞர் அண்ணாவால் தான் தமிழினம் பாராட்டுப்பெற்றது.
பேரறிஞர் அண்ணா
அன்பால் வருடி உணர்வுகளைத் தூண்டினார்.
அறிவுக்கதிர்கள் ஆயிரம் கொண்ட அரிஸ்டாடில் என்று அண்ணாவை
புகழ்ந்து சொல்லலாம்.
பேரறிஞர் அண்ணா மேடைகளில் பேசிய பேச்சின் நடையழகுக்கு நாளும் நற்சான்றுகளாகும்.
தீ பரவட்டும்
தம்பி வா
தலைமை தாங்க வா
எதையும் தாங்கும்
இதயம் வேண்டும்
எங்கிருந்தாலும் வாழ்க
வசவாளர் வாழ்க
ஏழை கோழை அல்ல ; எரிமலை!
ஏழையின் சொல் அம்பலமேறும் காலமிது
சாமானியர்களின் சகாப்தம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
பணிவு துணிவு கனிவு
தம்பியுடையான் படைக்கஞ்சான்
நாம் பலர்- அவர்கள் சிலர்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனமுண்டு
மறப்போம் மன்னிப்போம்
கொட்டிக் கிடக்கும் செங்கல் கட்டி முடித்த கோபுரம்
நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும்
இனி நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்
சென்று வருக
வென்று வருக
தமிழ் உமது
முரசாகட்டும்
பண்பாடு உமது
கவசமாகட்டும்
அறிவு உமது படைக்கலனாகட்டும்
அறநெறி உமது
வழித்துணையாகட்டும்
Revolution not by bullets
but by ballots
Determination Ever, Deviation Never
Tap the Rich-Pat the Poor
Your days are numbered but remember my steps are measured
என்றெல்லாம் உவமைத் தொடர்களை அடுக்குத்தொடர்களைத் தமிழகம் அதற்கு முன்னால் கேட்டதில்லை.
புத்துணர்ச்சியின் சிற்பியாகத் திகழ்ந்த பேரறிஞர் அண்ணா அவர்களை பேச்சுப் பாடகர் என்று உவமை கவிஞர் சுரதா பாராட்டியது நினையத்தக்க வரிகளாகும்
அவர் ஊட்டிய உணர்வு, மூட்டிய கனல் என்றும் அணையாது சுடர்விடச் செய்வது தமிழினத்தின் கடமையாகும்.