தமிழ் வளர்ச்சித் துறை
மற்றும்
இயல் இசை நாடக மன்றம்,
திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருப்பூர் இந்திய மருத்துவச் சங்கம்
திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா
அழைப்பிதழ்
நாள் : திருவள்ளுவராண்டு 2055 / ஆவணி 27
12.09.2024
(வியாழக்கிழமை)
நேரம் :
மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை
இடம் : இந்திய மருத்துவக் கழகம்,
மரு. முருகநாதன் அரங்கம், திருப்பூர்
தமிழ்சால் பெருந்தகையீர்!
வணக்கம்.
ஈரடியால் உலகளந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையின் வளத்தக்க சிந்தனைகளை வாழ்வியல் சூழலோடு இணைத்து வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஓர் அற்புதத் திருவிழா திருப்பூரில் மலர்கிறது.
கற்குந்தொறும் இன்பம்தருந் திருக்குறளைக், கண்கொள்ளாக் கவினோடு உள்ளன்பு ஊற்றி உவகைத்தேன் கலந்து கொண்டாடி மகிழ்கிறது
தமிழ் வளர்ச்சித் துறை.
கலை நிகழ்ச்சிகள், வில்லிசை, நாட்டுப்புறப் பாடல்கள், நடனம் என அமிழ்துவிளை தீங்கனிகளாய்த் தித்திக்கும் அரங்குகள் பல, குறள் ஞானப் பசிக்கு விருந்தாய்க் காத்திருக்கின்றன.
நிகழ்ச்சியின் மணிமுடியாய் முத்தமிழறிஞர் கலைஞர் தீட்டிய கவிதைச் சித்திரமாம் குறளோவியம் மூன்றாம் தமிழாய் முகிழ்த்து முத்திரை பதிக்க உள்ளது.
ஏழிசையும் பல்கலையும் கலந்து மணக்கும் இத்தமிழ்க் கலை விழாவில் பொற்குடத்திற்குப் பொட்டு வைத்தாற்போல் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு, திருக்குறள் முற்றோதலில் வெற்றி பெற்ற 147 மாணாக்கர்களுக்கு ரூ.15,000/-க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் தமிழறிஞர்களுக்கு கேடயமும் வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்.
உவமையிலாக் கலைஞானமும் உணர்வறிய மெய்ஞ்ஞானமும் படைத்த உலகப் பொதுமறையை, எளிவந்த முறையில் எல்லோர்க்கும் பந்திவைக்க, தழைக்கும் அன்புடன் அனைவரையும் அழைத்து மகிழ்கின்றேன்.
கனிவன்புடன்,
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நிகழ்ச்சி நிரல்
நாள் : திருவள்ளுவராண்டு 2055 / ஆவணி 27
12.09.2024 வியாழக்கிழமை
நேரம் : மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை
இடம்: இந்திய மருத்துவக் கழகம், மரு. முருகநாதன் அரங்கம், திருப்பூர்
மாலை 3.30-4.00
“கிராமியக் கலை நிகழ்ச்சி”
மாலை 4.00-4.30
“வில்லிசை”
மாலை 4.30 -5.00
“நாட்டுப்புறப்பாடல்”
மாலை 5.00 முதல் 6.30 மணி வரை விழா
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை :
ஒளவை அருள்,
இயக்குநர்.
தமிழ் வளர்ச்சித் துறை
தலைமையுரை :
திரு.தா.கிறிஸ்துராஜ் இ.ஆ.ப. அவர்கள்
மாவட்ட ஆட்சித்தலைவர். திருப்பூர்
திருக்குறள் முற்றோதிய மாணாக்கர்களுக்கு பரிசுத்தொகை ரூ.15,000/-க்கான காசோலை. பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தமிழறிஞர்களுக்கு கேடயம் வழங்கி விழாப் பேருரை :
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்
விழாச் சிறப்புரை :
மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் திருமதி நா.கயல்விழி செல்வராஜ் அவர்கள்
சிறப்புரை :
திருமதி விஜயா தாயன்பன் அவர்கள் உறுப்பினர் / செயலாளர். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
மரு. முருகநாதன் அவர்கள் தமிழ்ச் சங்கத் தலைவர். திருப்பூர்
மரு. பாண்டிராஜன் அவர்கள் ஐ.எம்.ஏ. தலைவர். திருப்பூர்
திரு. மோகன் கார்த்தி அவர்கள் தமிழ்ச் சங்கச் செயலாளர். திருப்பூர்
மரு. ஆனந்த் அவர்கள் ஐ.எம்.ஏ. செயலாளர். திருப்பூர்
முன்னிலை
திரு. ஆ. ராசா அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர். நீலகிரி
திரு.கே.சுப்பராயன் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர். திருப்பூர்
திரு.ப.தனபால் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், அவிநாசி
திரு.க.செல்வராஜ் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர், திருப்பூர் தெற்கு
வாழ்த்துரை :
திரு.கே.இ.பிரகாஷ் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர். ஈரோடு
திரு.கணபதி ப.ராஜ்குமார் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர், கோயமுத்தூர்
திரு.க.ஈஸ்வரசாமி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர். பொள்ளாச்சி
திரு.மு.சு.மு.ஆனந்தன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர். பல்லடம்
திரு.உடுமலை கா. ராதாகிருஷ்ணன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர். உடுமலைப்பேட்டை
திரு. க.நா.விஜயகுமார் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர். திருப்பூர் வடக்கு
திரு.சி.மகேந்திரன் அவர்கள் சட்டமன்ற உறுப்பினர். மடத்துக்குளம்
மாலை 6.30-7.00
கலைமாமணி திரு. ஜாகீர் உசேன் குழுவினரின் “பரதநாட்டியம்”
மாலை 7.00-8.00
மேகலா கலைக்குழு வழங்கும் “முத்தமிழறிஞர் கலைஞரின் குறளோவியம்”
நன்றியுரை
திரு. பெ. இளங்கோ
துணை இயக்குநர். திருப்பூர்
நாட்டுப்பண் .