தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகவும் செம்மையாகவும் செயற்படுத்திட அனைத்து மாவட்டங்களிலும் தமிழாய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பெற்றனர்.
மாவட்டங்களிலுள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களின் அமைப்பானது
தமிழாய்வு அலுவலர் அலுவலகம் எனவும்
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் எனவும் வெவ்வேறு வகையில் அமைந்திருந்தன.
அலுவலர், பணியாளர் அமைப்பும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டிருந்தது.
ஆட்சிமொழித் திட்ட ஆய்வுப்பணிகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் அமைய வேண்டியதைக் கருத்திற்கொண்டு,
1997-98ஆம் ஆண்டுகளில் அரசு முனைப்பான நடவடிக்கைகளையெடுத்து, அலுவலகக் கட்டமைப்பில் சீராக்கம் செய்து
தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களில் உதவி இயக்குநர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன.
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணிக்கான நியமனமானது கண்காணிப்பாளர் பணியிலிருந்து பணி மாறுதல், நேரடி நியமனம் மற்றும் பிற பணியாளர் தொகுதியிலிருந்து பணி மாற்றத்தின் மூலம் என 1:1:1என்ற விகிதாச்சாரத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என 2015-இல் ஆணையிடப்பட்டது.
பின்னர் 2018இல் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணிக்கான நியமனமானது பணி மாறுதல் மற்றும் நேரடி நியமனம் மூலம் என 1:1என்ற விகிதாச்சாரத்தின்படி மேற்கொள்ளப்பட வேண்டும் என விதித் திருத்தம் செய்து ஆணையிடப்பட்டது.
அதனடிப்படையில், நேரடி நியமனம் மூலம் நிறைவு செய்யப்படவேண்டிய 13 உதவி இயக்குநர் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்ப 2019ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சி இயக்குநரால் கருத்துரு அனுப்பப்பெற்று 2021இல் செயலாணை வெளியிடப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒழிவாக உள்ள பணியிடங்களை விரைந்து நிறைவு செய்திட உடன் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியதற்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
தமிழ் வளர்ச்சித் துறையில் ஒழிவாக உள்ள உதவி இயக்குநர் பணியிடங்களில் நேரடி நியமனம் வாயிலாக நிறைவு செய்யப்படவேண்டிய 13 பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிறைவு செய்திட தேர்வாணையத்தால் 30.08.2024அன்று அறிவிக்கை வெளியிடப்பெற்ற செய்திக் குறிப்புகள்
விடுதலை,
ஞாயிறு (01.09.2024)
பக்கம் 5:
தமிழ் வளர்ச்சித் துறையில் முதல்முறையாக
உதவி இயக்குநர்கள்
நேரடி நியமனம்
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை, செப் 1
தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதன்முறையாக நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்படுவார்கள்.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ் அலுவல் மொழிச் சட்டத்தின்படி, தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள், பொதுத்துறை மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தமிழ் வளர்ச்சித் துறை செயல்பட்டு வருகிறது.
இத்துறை ஒரு இயக்குநரின் தலைமையில் உள்ளது
மற்றும் அவருக்கு கீழ் துணை இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குனர்கள் உட்பட அதிகாரிகள் உள்ளனர்.
மாவட்ட அளவில் உதவி இயக்குநர்களும், மண்டல அளவில் (சேலம் மற்றும் திருநெல்வேலி) துணை இயக்குநர்களும் உள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவி இதுவரை பதவி உயர்வு மூலம் மட்டுமே நிரப்பப்பட்டு வந்தது.
இத்தகைய சூழ்நிலையில், இப்போது முதல் முறையாக TNPSC மூலம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவிக்கான I3 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை TNPSC இன்று ஆகஸ்ட் 30 வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ் இலக்கியத்தில் பி.ஏ. மற்றும் எம்.ஏ பட்டம் படித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 34 வயதாகவும், இடஒதுக்கீடு பிரிவினருக்கு பிசி பிசி-முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 30 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வு நவம்பர் மாதம் நடைபெறும்.
மொத்தம் 3 பகுதிகளைக் கொண்ட இந்தத் தேர்வில், கட்டாயத் தமிழ் மொழித் தேர்ச்சித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வு நவம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தமிழ் மொழித்
தாளுக்கான தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வில் (நேர்காணலுடன்) தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் தேர்வு மட்டுமின்றி
அரசு கலைக் கல்லூரி நூலகர், அரசு சட்டக் கல்லூரி நூலகர், கால்நடை அலுவலர்,
கணக்கு அலுவலர்,
உதவி மேலாளர் உள்ளிட்ட 26 வகையான பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
இந்தத் தேர்வுகளுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இணைய வழி விண்ணப்பம் தேர்வு முறை, தேர்வு மையங்கள், பல்வேறு தேர்வுகளுக்கான பணியிடங்கள். பாடத்திட்டம் போன்ற விவரங்களை தேர்வு வாரிய இணையதளத்தில் (www. tnpsc.gov.in) தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணியில் சேருபவர்கள் துணை இயக்குநர் மற்றும் இயக்குநராக வரிசையாக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் வளர்ச்சித் துறையில் முதல்முறையாக உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்
டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
சென்னை தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவி இதுவரை பதவி உயர்வு மூலமாக மட்டுமே நிரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளது.
அந்த வகையில் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவியில் 13 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்குரிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படிந்தவர் கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு
பொதுப்பிரிவினருக்கு 34 ஆகவும், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (பிசி, பிசி – முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி) 39 ஆகவும் நிரணயிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது.
26 வகை பணிகள்
மொத்தம் 3 பகுதிகளைக்கொண்ட இந்த தேர்வில் கட்டாய தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வு நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்மொழித் தாள் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முகத் தேர்வு உள்ளவை) தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் தேர்வு மட்டுமின்றி
அரசு கலைக் கல்லூரி நூலகர், அரசு சட்டக்கல்லூரி நூலகர். கால்நடை மருத்துவர்.
கணக்கு அலுவலர், உதவி மேலாளர் உட்பட 26 வகையான பணிகளுக்கான தேர்வுகளும் இடம் பெற்றுள்ளன.
ஆன்லைனில் விண்ணப்ப பதிவு
இத்தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு செப்.28-ம் தேதியுடன் முடிவடைகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையம், வெவ்வேறு தேர்வுகளுக்கான பதவிகள், பாடத்திட்டம் உள்ளிட்ட விவரங்களை தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc. gov.in) தெரிந்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநராகப் பணியில் சேருவோர் துணை இயக்குநர், இயக்குநர் என அடுத்தடுத்து பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினபூமி செப்டம்பர் 01,2024 : பக்கம் 3:
தமிழ்வளர்ச்சித் துறையில் முதல்முறையாக
உதவி இயக்குநர்கள் நேரடி நியமனம்: டி.என்.பி.எஸ்.சி.
சென்னை, செப் 01-
தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குநர்கள் முதல்முறையாக நேரடி நியமன முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான அறிவிப்பை
டி என்.பி.எஸ். சி. நேற்று வெளியிட்டுள்ளது.
தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின்படி தமிழக அரசின் அனைத்து துறைகள், வாரியங்கள் பொதுத்துறை மற்றும் தன்னாட்சி நிறுவனங்க வில் தமிழை முழுமையாக பயன்படுத்தும் நோக்கில் தமிழ் வளர்ச்சித் துறை இயங்கி வருகிறது.
தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் கீழ் இயங்கும் இத்துறையின் தலைமை பொறுப்பில் இயக்குநரும் அவருக்கு கீழ் துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் உள்ளிட்ட அலுவலர்களும் பணியாற்றி வருகின்றனர்.
மாவட்ட அளவில் உதவி இயக்குநர்களும் மண்டல அளவில் (சேலம் மற்றும் திருநெல்வேலி) துணை இயக்குநர்களும் உள்ளனர்.
தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவி இதுவரை பதவி உயர்வு மூலமாக மட்டுமே நிரப்பப்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது முதல்முறையாக டி.என்.பி. எஸ்.சி. மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்பட உள்ளது.
அந்த வகையில் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பதவியில் 13 காலியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வுக்குரிய அறிவிப்பை டி என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டுள்ளது.
அதன்படி தமிழ் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு
பொதுப் பிரிவினருக்கு 34 ஆகவும். இடஒதுக்கீட்டுப் பிரிவின ருக்கு (பி.சி. பி.சி.-முஸ்லிம், எம்.பி.சி. எஸ்.சி. எஸ்.டி) 39 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்பட இருக்கிறது.
மொத்தம் 3 பகுதிகளை கொண்ட இந்த தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வு நவம்பர் 18-ம் தேதி நடைபெறுகிறது.
தமிழ்மொழி தாள் தேர்வு நாள் பின்னர் அறிவிக் கப்படும் என்று டி. என். பி. எஸ்.சி. தெரிவித்துள்ளது.