2022-ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் (11.07.2024) சென்னை, இராஜா அண்ணாமலை புரம், டி. ஜி. எஸ். தினசரன் சாலை (இசைக் கல்லூரிச் சாலை)யில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் பரிசு வழங்கப்பட்டது.
தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக செயற்படுத்தப்படும் சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின் வாயிலாக 33 வகைப்பாடுகளில் நூல்கள் பெறப்பட்டு ஒவ்வொரு நூலையும் மூன்று அறிஞர்களைக் கொண்டு மதிப்பீடு செய்து சிறந்த படைப்புகள் தெரிவு செய்யப்படுகின்றன.
தெரிவு செய்யப்பெற்ற நூலை எழுதிய நூலாசிரியருக்கு ரூ.30,000/-மும் அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு ரூ.10,000/-மும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன.
அவ்வரிசையில், 2022-ஆம் ஆண்டில் வெளியிடப்பெற்று சிறந்த நூல் பரிசுத் திட்டத்தின்கீழ் சிறந்த நூலாகத் தெரிவு செய்யப்பட்ட
-
மரபுக் கவிதை எனும் வகைப்பாட்டில் இராமானுச மாமுனிவர் காவியம் எனும் நூலை எழுதிய பேரா. கரு. நாகராசன் அவர்களுக்கும் பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும்,
-
புதுக் கவிதை எனும் வகைப்பாட்டில் புண் உமிழ் குருதி எனும் நூலை எழுதிய முனைவர் இரா. சின்னசாமி இ.கா.ப. (ஓய்வு)அவர்களுக்கும் பதிப்பித்த உயிர்மை பதிப்பகத்தாருக்கும்,
-
புதினம் எனும் வகைப்பாட்டில் குரவை எனும் நூலை எழுதிய திரு. சிவகுமார்
(சிவகுமார் முத்தய்யா) அவர்களுக்கும் பதிப்பித்த யாவரும் பப்ளிஷர்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
-
சிறுகதை எனும் வகைப்பாட்டில் பெரிய வாய்க்காதெரு எனும் நூலை எழுதிய திரு. ப. அன்பழகன் (பாரதி வசந்தன்) அவர்களுக்கும் பதிப்பித்த டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
-
நாடகம் (உரைநடை, கவிதை) எனும் வகைப்பாட்டில் புகழ் அமுதம் 2022 எனும் நூலை எழுதிய திரு. ஞா. மாணிக்கவாசகன் அவர்களுக்கும் பதிப்பித்த உமா பதிப்பகத்தாருக்கும்,
-
சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் சிறார் நலம் தேடு எனும் நூலை எழுதிய திரு. சு. கந்தசுவாமி (மலரடியான்) அவர்களுக்கும் பதிப்பித்த லாலிபாப் சிறுவர் உலகம் பதிப்பகத்தாருக்கும்,
-
திறனாய்வு எனும் வகைப்பாட்டில் தமிழ்த்தேன் துளிகள் எனும் நூலை எழுதிய பவள சங்கரி திருநாவுக்கரசு அவர்களுக்கும் பதிப்பித்த பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
-
மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி,இலக்கணம் எனும் வகைப்பாட்டில் தொல்காப்பியம் பொருண்மை நோக்குப் பதிப்பு கூற்று எனும் நூலை எழுதிய முனைவர் ஆ. மணி அவர்களுக்கும் பதிப்பித்த தமிழன்னை ஆய்வகம் பதிப்பகத்தாருக்கும்,
-
பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் மழலையர் கல்வி எனும் நூலை எழுதிய ஆயிஷா இரா. நடராசன் அவர்களுக்கும் பதிப்பித்த பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தாருக்கும்,
-
நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்) எனும் வகைப்பாட்டில் திரை இசையில் தமிழிசை எனும் நூலை எழுதிய நிழல் ப. திருநாவுக்கரசு
(ப. சோழநாடன்) அவர்களுக்கும் பதிப்பித்த நிழல் பதிப்பகத்தாருக்கும்,
-
அகராதி, கலைக் களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் நெலிகோலுபடகு – தமிழ் – ஆங்கிலம் அகராதி எனும் நூலை எழுதிய திரு. இரா.கு. ஆல்துரை அவர்களுக்கும் பதிப்பித்த நெலிகோலு அறக்கட்டளை, நெலிகோலு வெளியீட்டகம் பதிப்பகத்தாருக்கும்,
-
பயண இலக்கியம் எனும் வகைப்பாட்டில் இதயம் கவர்ந்த இலங்கை எனும் நூலை எழுதிய பொறியாளர் கு. வெங்கடேசன் அவர்களுக்கும் பதிப்பித்த ஸ்ரீகுரு இராகவன் பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தாருக்கும்,
-
வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு எனும் வகைப்பாட்டில் சிவாஜி கணேசன் எனும் நூலை எழுதிய முனைவர் மருதுமோகன் அவர்களுக்கும் பதிப்பித்த வளரி ஸ்டுடியோஸ் பதிப்பகத்தாருக்கும்,
-
நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு எனும் வகைப்பாட்டில் ராஜராஜனின் கொடை எனும் நூலை எழுதிய திருமதி க. சுபாஷினி அவர்களுக்கும் பதிப்பித்த தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தாருக்கும்,
-
கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல் எனும் வகைப்பாட்டில் நமது சூரியக்குடும்பமும் விண்வெளி ஆராய்ச்சி வரலாறும் எனும் நூலை எழுதிய திரு. அ. சோழராஜன் (ஆதனூர்சோழன்) அவர்களுக்கும் பதிப்பித்த சிபி பதிப்பகத்தாருக்கும்,
-
பொறியியல், தொழில் நுட்பவியல் எனும் வகைப்பாட்டில் மீன்வளம் சார்ந்த தொழில்களில் சுயவேலை வாய்ப்புகள் எனும் நூலை எழுதிய டாக்டர் ஓ. ஹென்றி ஃபிரான்சிஸ் அவர்களுக்கும் பதிப்பித்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தாருக்கும்,
-
மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல் எனும் வகைப்பாட்டில் தெய்வீக ஆறுகளும் பெருமைகளும் எனும் நூலை எழுதிய பேராசிரியர் சொ.சொ.மீ. சுந்தரம் அவர்களுக்கும் பதிப்பித்த மணிமேகலைப் பிரசுரம் பதிப்பகத்தாருக்கும்,
-
சட்டவியல், அரசியல் எனும் வகைப்பாட்டில் ஊடகச் சட்டங்கள் எனும் நூலை எழுதிய திருமதி சந்திரிகா சுப்ரமண்யன் அவர்களுக்கும் பதிப்பித்த சந்திரோதயம் பதிப்பகத்தாருக்கும்,
-
பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் இயற்கையோடு இயைந்த அறிவியல் எனும் நூலை எழுதிய முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும் பதிப்பித்த பாரதி புத்தகாலயப் பதிப்பகத்தாருக்கும்,
-
மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் முதியோர் நலம் எனும் நூலை எழுதிய மருத்துவர் வி.எஸ். நடராஜன் அவர்களுக்கும் பதிப்பித்த டாக்டர். வி.எஸ். நடராஜன் நல அறக்கட்டளை பதிப்பகத்தாருக்கும்,
-
தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) எனும் வகைப்பாட்டில் வளம் தரும் நெல்லி எனும் நூலை எழுதிய திரு. கே.எஸ். சண்முகம் அவர்களுக்கும் பதிப்பித்த நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட் பதிப்பகத்தாருக்கும்,
-
சமயம், ஆன்மிகம், அளவையியல் எனும் வகைப்பாட்டில் இராஜராஜ சோழனின் தஞ்சை பெரிய கோவில் எனும் நூலை எழுதிய திரு. எ.பி. ஜனகராஜா அவர்களுக்கும் பதிப்பித்த வானதி பதிப்பகத்தாருக்கும்,
-
கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் சூப்பர் குழந்தை எனும் நூலை எழுதிய திரு. பிரகாஷ் ராஜகோபால் அவர்களுக்கும் பதிப்பித்த சுவாசம் பதிப்பகத்தாருக்கும்,
-
வேளாண்மையியல், கால்நடையியல் எனும் வகைப்பாட்டில் செம்மை வருவாய் தரும் செம்மறியாடு எனும் நூலை எழுதிய முனைவர் க. லோகநாதசாமி அவர்களுக்கும் பதிப்பித்த கால்நடை வேளாண்மை பதிப்பகத்தாருக்கும்,
-
சுற்றுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் கழுகுகளின் காடு எனும் நூலை எழுதிய திரு. சு. சந்திரசேகரன் (எ) சந்துரு அவர்களுக்கும் பதிப்பித்த கிழக்குப் பதிப்பகத்தாருக்கும்,
-
கணினியியல் எனும் வகைப்பாட்டில் தாய்மொழி – சி எனும் நூலை எழுதிய திரு. மு. சிவலிங்கம் (சினேகலதா) அவர்களுக்கும் பதிப்பித்த பாரதி புத்தகாலயப் பதிப்பகத்தாருக்கும்,
-
நாட்டுப்புறவியல் எனும் வகைப்பாட்டில் மண்சார் வாழ்வியல் எனும் நூலை எழுதிய திரு. அ. பழனியப்பன் (கவிஞர் கழுகூர் பழனியப்பன்) அவர்களுக்கும் பதிப்பித்த தமிழ்ச்சங்கு பதிப்பகத்தாருக்கும்,
-
வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் எண்ணப் பூக்கள் எனும் நூலை எழுதிய திரு. ஃபாசில் ஃப்ரீமேன் அலி அவர்களுக்கும் பதிப்பித்த சிபி பதிப்பகத்தாருக்கும்,
-
இதழியல், தகவல் தொடர்பு எனும் வகைப்பாட்டில் கலகக்கார கலைஞர்கள் எனும் நூலை எழுதிய திரு. ச. செந்தில்குமார் (நெய்வேலி பாரதிக்குமார்) அவர்களுக்கும் பதிப்பித்த புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிட் பதிப்பகத்தாருக்கும்,
-
பிறசிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் தண்ணீர் நீரலைகளும் நினைவலைகளும் எனும் நூலை எழுதிய மதுமிதா அவர்களுக்கும் பதிப்பித்த ஸ்நேகா வெளியீடு பதிப்பகத்தாருக்கும்,
-
விளையாட்டு எனும் வகைப்பாட்டில் கால்களின் தவம் தேக்வாண்டோ எனும் நூலை எழுதிய திரு. சே. லோகராஜ் (மாஸ்டர் சே. லோகராஜ்) அவர்களுக்கும் பதிப்பித்த பெ. சேகர் வெளியீடு பதிப்பகத்தாருக்கும்,
-
மகளிர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் கதவு திறந்ததும் கடல் எனும் நூலை எழுதிய பிருந்தா சேது அவர்களுக்கும் பதிப்பித்த ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகத்தாருக்கும்,
-
தமிழர் வாழ்வியல் எனும் வகைப்பாட்டில் புலம் பெயர் தமிழர்கள் வாழ்வு – இருப்பு – படைப்பு எனும் நூலை எழுதிய பேரா. ச. சீனிவாசன் அவர்களுக்கும் பதிப்பித்த பாலாஜி இண்டர்நேஷனல் பதிப்பகத்தாருக்கும,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் (11.07.2024 வியாழக் கிழமை) சென்னை, அடையாறு, இராஜா அண்ணாமலைபுரம், டி.ஜி.எஸ். தினகரன் சாலையில், உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் முனைவர் இல.சுப்பிரமணியன் இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ஔவை அருள், தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் திருமதி கு.ப.சத்யபிரியா மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.