செய்திகள்

சிவகங்கை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பொன்னாடை அணிவித்தும் நூல் பரிசும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்களால் பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன. முன்னதாக 11, 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டியில் மாநில அளவில் பரிசு பெற்ற மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பொன்னாடை அணிவித்தும் நூல் பரிசும் வழங்கிச்சிறப்பிக்கப்பெற்றனர்.