சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகள்
கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கி, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் […]