Category Archives: தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு!

தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு! மங்கையராகப் பிறப்பெடுத்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண், இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். மேலும் இத்துறையின் திட்டங்களை செயற்படுத்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட மகளிர் அனைவரும் அல்லும் பகலும் அயராது உழைத்து அனைத்து நிலைகளிலும் துறையை உயர்த்தி […]

தமிழறிஞர்கள் ஒன்பதின்மரின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் – நூலுரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களால் 2024-25ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை(ரூபாய் 90.00 இலட்சம்) வழங்கப்படவுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் […]

ஆலோசனைக் கூட்டம்

நேற்று (28.10.24) செவ்வாய்க்கிழமைதலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் திரு வே இராஜாராமன் இ. ஆ. ப. பேராசிரியர் திரு சுப வீரபாண்டியன் பத்திரிகையாளர் திரு பதிருமாவேலன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் […]

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் புதிய அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

தமிழ் வளர்ச்சித் துறையில் 2024 -25- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை(23.10.24,) ஆய்வு நடத்திய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். உடன், துறையின் செயலர் வே.ராஜாராமன், இயக்குநர் ந.அருள்.

2024 ஆம் ஆண்டுஅண்ணல் அம்பேத்கர்,தந்தை பெரியார்,பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஆகியோரின் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மாணவ/ மாணவியர்க்கு பரிசளிப்பு விழா
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்குத் திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கும் திட்டம்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம்கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்ததமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது.முதுமைக்காலத்திலும் பொருள் வறுமை, தமிழ்த் தொண்டர் பெருமக்களைத்தாக்காவண்ணம் திங்கள்தோறும் ரூ.3500/-ம், மருத்துவப்படி ரூ.500/-ம் என நான்காயிரம்ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. தமிழுக்காகத் தம் வாழ்நாளைஈந்துவரும் பெருமக்களுக்கு இந்த உதவித்தொகை அவர்கள் வாழுங்காலமெல்லாம் தமிழ்த்திருப்பணியில் தொய்வின்றி ஈடுபடும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. தகைமைமேல்தகைமையாக, அகவை முதிர்ந்த தமிழ்ச் சான்றோர் பெருமக்களுக்கு அரசுப் பேருந்துகளில்கட்டணமில்லாப் […]

நூல் வெளியீட்டு விழா

18.9.24 புதன்கிழமைகாலை 11 மணிசென்னைப்பல்கலைக்கழகம் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அருள் உரைப்பகுதி ஒலியலை ஓவியர்கள் என்ற சிறந்த ஆவணத்தினை தமிழ்நாடு அரசின் இளங்கோவடிகள் விருதுப்பெற்றமுனைவர் வெ நல்ல தம்பி எழுதியுள்ளார். ஊடகத்துறைக்கோர் உ வே சா என்று மகாகவி ஈரோடு தமிழன்பன் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. 29 கட்டுரைக் கரும்புகளை212 பக்கத்தில் அருமையாக படைத்துள்ளார் நூலாசிரியர் நல்லதம்பி எந்தையார் ஔவை நடராசனை விட ஓராண்டு இளையவர் ஆவார். எந்த யார்1964 இல்தில்லி வானொலி நிலையத்தில் […]

தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024

புதுவைத் தமிழ்ச் சங்கம்நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024 நாள்: 17.09.2024 செவ்வாய்கிழமைகாலை 10.00 மணிஇடம் :ஜெயந்தி நாராயணன் திருமண மாளிகைஎண்.333, பழைய ஜி.எஸ்.டி. சாலை,இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சென்னை-600 059 நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : செல்வி.எஸ்.வர்சினி ஸ்ரீராம் நாதஸ்வரம் : அடையார் டாக்டர் எஸ்.பத்பநாபன் குழுவினர் தலைவர்,தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் தலைமை : கலைமாமணிமுனைவர் வி.முத்துதலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம் முன்னிலை : இலக்கியத் […]

இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்றவர்களுக்குத்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணியிடம்தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகவும் செம்மையாகவும் செயற்படுத்திட அனைத்து மாவட்டங்களிலும் தமிழாய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பெற்றனர். மாவட்டங்களிலுள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களின் அமைப்பானதுதமிழாய்வு அலுவலர் அலுவலகம் எனவும்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் எனவும் வெவ்வேறு வகையில் அமைந்திருந்தன. அலுவலர், பணியாளர் அமைப்பும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டிருந்தது. ஆட்சிமொழித் திட்ட ஆய்வுப்பணிகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் அமைய வேண்டியதைக் கருத்திற்கொண்டு, 1997-98ஆம் ஆண்டுகளில் அரசு முனைப்பான நடவடிக்கைகளையெடுத்து, அலுவலகக் கட்டமைப்பில் சீராக்கம் செய்துதமிழ் […]

உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச் சிறந்த நூல்கள் 100

உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச் சிறந்த நூல்கள் 100 பல்கலைக்கழகங்கள மற்றும் நூலகங்களில் இடம்பெறச் செய்தல் தொடர்பான முதல்நிலைக் கூட்டம் (30.08.2024) நடைபெற்றது. உலகிலேயே பழமையான மொழிகள் எனக் கருதப்படும் தமிழ், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சீனம் மற்றும் வடமொழி ஆகிய மொழிகளுள் சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் புதுப்பித்து வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ் மொழியாகும். தமிழ்மொழியின் சிறப்புகளை நுண்ணாய்ந்து บด அறிஞர்கள் தமிழ் மொழியின் தகுதிகளை உயர்த்த வேண்டுமென்று […]