Category Archives: ஆட்சிமொழிப் பயிற்சி

ஆய்வும் -செயலாக்கமும்

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை 7.2.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு‌. பிரபாகர் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கியதோடு அவரது முன்னிலையில் வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பாக செயற்பட வாழ்த்து

அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3,44,41,750/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,50,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) வழங்கப்பட்டதோடு, மாண்புமிகு […]

தகைமையாளர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவ பேரறிவுச் சிலையின் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்கில் 30.12.24 ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்குறள் தகைமையாளர்களுக்கு காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி மகிழ்ந்தார். அருகில் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  

தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024

புதுவைத் தமிழ்ச் சங்கம்நக்கீரர் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் தமிழ்ச் சான்றோர்கள் மாநாடு 2024 நாள்: 17.09.2024 செவ்வாய்கிழமைகாலை 10.00 மணிஇடம் :ஜெயந்தி நாராயணன் திருமண மாளிகைஎண்.333, பழைய ஜி.எஸ்.டி. சாலை,இரும்புலியூர், கிழக்கு தாம்பரம், சென்னை-600 059 நிகழ்ச்சி நிரல் தமிழ்த்தாய் வாழ்த்து : செல்வி.எஸ்.வர்சினி ஸ்ரீராம் நாதஸ்வரம் : அடையார் டாக்டர் எஸ்.பத்பநாபன் குழுவினர் தலைவர்,தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கம் தலைமை : கலைமாமணிமுனைவர் வி.முத்துதலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம் முன்னிலை : இலக்கியத் […]

பேரறிஞர் அண்ணா116 ஆம் பிறந்தநாள் (15.9.24)

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் என்று எண்ணும்போதே நமக்குப் பெருமிதத்தால் தமிழ் சிலிர்ப்பு ஏற்படுகிறது. பேரறிஞர் அண்ணாவால் தான் தமிழினம் பாராட்டுப்பெற்றது. பேரறிஞர் அண்ணாஅன்பால் வருடி உணர்வுகளைத் தூண்டினார். அறிவுக்கதிர்கள் ஆயிரம் கொண்ட அரிஸ்டாடில் என்று அண்ணாவைபுகழ்ந்து சொல்லலாம். பேரறிஞர் அண்ணா மேடைகளில் பேசிய பேச்சின் நடையழகுக்கு நாளும் நற்சான்றுகளாகும். தீ பரவட்டும் தம்பி வாதலைமை தாங்க வா எதையும் தாங்கும்இதயம் வேண்டும் எங்கிருந்தாலும் வாழ்க வசவாளர் வாழ்க ஏழை கோழை அல்ல ; எரிமலை! ஏழையின் […]

திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா

தமிழ் வளர்ச்சித் துறைமற்றும்இயல் இசை நாடக மன்றம்,திருப்பூர் தமிழ்ச் சங்கம், திருப்பூர் இந்திய மருத்துவச் சங்கம் திருக்குறள் இசை நாடக வடிவிலான நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்புப் பெருவிழா அழைப்பிதழ் நாள் : திருவள்ளுவராண்டு 2055 / ஆவணி 2712.09.2024(வியாழக்கிழமை) நேரம் :மாலை 3.30 மணி முதல் 8.00 மணி வரை இடம் : இந்திய மருத்துவக் கழகம்,மரு. முருகநாதன் அரங்கம், திருப்பூர் தமிழ்சால் பெருந்தகையீர்! வணக்கம். ஈரடியால் உலகளந்து வான்புகழ் கொண்ட வள்ளுவப் பெருந்தகையின் வளத்தக்க சிந்தனைகளை வாழ்வியல் […]