All posts by Tamil Valarchi Thurai

கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம்

கம்பன் ஓர் உலகப் பெருங்கவிஞர்; உலகப் பெருங்காப்பியங்களின் வரிசையில், உன்னதமான இடம் வகிக்கும் ஒரு பெருங்காப்பியத்தைப் படைத்த பெருமைக்கு உரியவர்; ‘புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு அருந்தமிழுக்கு அழியாதப் புகழ் சேர்த்தவர். இராமாவதாரம் என்ற கம்பர் காப்பியம் பாலக் காண்டம், அயோத்தியாக் காண்டம், ஆரணியக் காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், இலங்கைக் காண்டம் என ஆறு காண்டங்களாக 10,368 பாடல்களைக் கொண்டது. ஒரு பாடலுக்கு நான்கு சீர்களில் இருந்து […]

தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு!

தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு! மங்கையராகப் பிறப்பெடுத்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண், இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். மேலும் இத்துறையின் திட்டங்களை செயற்படுத்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட மகளிர் அனைவரும் அல்லும் பகலும் அயராது உழைத்து அனைத்து நிலைகளிலும் துறையை உயர்த்தி […]

சர். ஜான் ஹுபர்ட் மார்ஷல் திருவுருவச் சிலை அமைக்கும் பணிக்கான ஆய்வு

இன்று (17.03.2025) சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் விரைவில் திறக்கப்படவுள்ள சர். ஜான் ஹுபர்ட் மார்ஷல் அவர்களது திருவுருவச் சிலை அமைக்கும் பணியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் திருமதி கவிதா ராமு, […]

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 […]