செய்திகள்

வாகை போற்றுதும்! போற்றும் பொன்னாள்!!

குயில்போலும் பாட்டுத் தமிழ் வளர்த்த பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135 ஆம் பிறந்தநாள், தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர் எண்மருக்கும் பொன்னாளாக மிளிர்ந்தது. ஆமாம், அன்று கண்காணிப்பாளர் எண்மருக்கு உதவி இயக்குநர்களாகப் பதவியுயர்வு 2023-2024 ஆம் ஆண்டுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலுக்கான தெரிவு செய்யப்பட்டோர் அரசாணைகள் வழங்கப்பெற்றன. 10.8.2022க்குப்பிறகு 29.4.25 அன்று எட்டுப்பேர் எட்டிய இலக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பினில் ( 30. 4. 2025 ) திருவல்லிக்கேணி – மகாகவி பாரதியார் நினைவு இல்லத்தில் […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135-ஆவது பிறந்தநாள் ‘தமிழ் வார விழா’-வாகக் கொண்டாடப்படுகிறது

தமிழை வளர்த்தல் ஒன்று: சாதியை ஒழித்தல் மற்றொன்று என்று கொள்கைப் பாதை வகுத்துத் தந்தவர் புரட்சிக் கவிஞர் அவர்கள். மொழி உணர்ச்சி, மொழி மானம், மொழி குறித்த பெருமிதம் ஆகியவற்றின் மொத்த வடிவம்தான் புரட்சிக் கவிஞர். 1929ஆம் ஆண்டே தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தவை பாவேந்தரின் பாடல்கள்தான். அத்தகைய பாவேந்தரை தமிழ்நாட்டின் வால்ட் விட்மன் என்று புகழ்ந்து பேசினார் பேரறிஞர் அண்ணா அவர்கள். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எங்கே, எப்பொழுது பேசினாலும் அதிலே […]

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் திரு.தி. வேல்முருகன் அவர்கள் தலைமையில் அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி (2024-2026) தொடர்பாக அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அரசு உறுதிமொழிக் குழுத் தலைவர் / சட்டமன்ற உறுப்பினர் திரு.தி.வேல்முருகன் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கீ.சினிவாசன். உறுதிமொழிக் குழு உறுப்பினர்கள்/சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. எஸ். அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூர்), திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் (விருதுநகர்), திரு.எ.நல்லதம்பி (திருப்பத்தூர்), திரு.எம்.கே.மோகன் (அண்ணாநகர்), திரு.எம்.சக்கரபாணி (வானூர்), திரு.எஸ்.ஜெயக்குமார் (பெருந்துரை), திரு.சா.மாங்குடி (காரைக்குடி), திரு.இரா.அருள் (சேலம் (மேற்கு) ஆகியோர் முன்னிலையில் பெருநகர சென்னை […]

இளங்கோவடிகள் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம்

இளங்கோவடிகள் வேந்தர் குலத்திற் பிறந்தவர். உயர் கல்வி பெற்று வளர்ந்தவர். கணியன் கூறியபடி அரசாளும் திருப்பொறி வாய்ந்தவர். காதலை வெறுத்தோ கடமைக்கு அஞ்சியோ இவர் துறவு மேற்கொள்ளவில்லை. மூத்தவன் ஆளும் அரச மரபு பிறழக்கூடாது என்பதற்காகவே துறவு மேற்கொண்டார். அடிகளான பின்னுங் கூட “குடக்கோச்சேரல் இளங்கோ” என்றே குறிப்பிடுகிறார். செந்தமிழ்ச்செல்வியின் காற்சிலம்பு காரணமாக அருந்தமிழ் அன்னைக்கு நூற்சிலம்பு அணிவித்த பெருமை இளங்கோவடிகளைச் சாரும். குலத்தாலும், குணத்தாலும், அரசியல் நெஞ்சம் வாய்ந்த ஒரு புலவர், காப்பியம் இயற்றினார் என்றால் […]

அய்யன் திருவள்ளுவர் சிலைகள் அமைவிட வழிகாட்டி
தமிழால் முடியும் – வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி

பிரிவுகள்