செய்திகள்

தமிழ் வளர்ச்சி, எழுதுப்பொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இன்று (10.09.2024) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் தமிழ் வளர்ச்சி, எழுதுப்பொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., எழுதுப்பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் திருமதி வெ.ஷோபனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு […]

உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களின் தொடர் முயற்சியால் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது. மதுரையில் 1981இல் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 1986இல் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி […]

இளங்கலை மற்றும் முதுகலை தமிழிலக்கியம் பயின்றவர்களுக்குத்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணியிடம்தமிழ்நாடு தேர்வாணைய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாகவும் செம்மையாகவும் செயற்படுத்திட அனைத்து மாவட்டங்களிலும் தமிழாய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பெற்றனர். மாவட்டங்களிலுள்ள தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகங்களின் அமைப்பானதுதமிழாய்வு அலுவலர் அலுவலகம் எனவும்தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம் எனவும் வெவ்வேறு வகையில் அமைந்திருந்தன. அலுவலர், பணியாளர் அமைப்பும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டிருந்தது. ஆட்சிமொழித் திட்ட ஆய்வுப்பணிகள் முறையாகவும் தொடர்ச்சியாகவும் அமைய வேண்டியதைக் கருத்திற்கொண்டு, 1997-98ஆம் ஆண்டுகளில் அரசு முனைப்பான நடவடிக்கைகளையெடுத்து, அலுவலகக் கட்டமைப்பில் சீராக்கம் செய்துதமிழ் […]

உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச் சிறந்த நூல்கள் 100

உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழின் மிகச் சிறந்த நூல்கள் 100 பல்கலைக்கழகங்கள மற்றும் நூலகங்களில் இடம்பெறச் செய்தல் தொடர்பான முதல்நிலைக் கூட்டம் (30.08.2024) நடைபெற்றது. உலகிலேயே பழமையான மொழிகள் எனக் கருதப்படும் தமிழ், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், சீனம் மற்றும் வடமொழி ஆகிய மொழிகளுள் சிதையாத மொழியாக அன்று முதல் இன்று வரை ஒரே நிலையில் புதுப்பித்து வாழ்ந்து கொண்டிருப்பது தமிழ் மொழியாகும். தமிழ்மொழியின் சிறப்புகளை நுண்ணாய்ந்து บด அறிஞர்கள் தமிழ் மொழியின் தகுதிகளை உயர்த்த வேண்டுமென்று […]

ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 70ஆம் அணி

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை சென்னை மாவட்டம் ஆட்சிமொழித் திட்டப் பயிற்சி 70ஆம் அணி நாள் : திருவள்ளுவராண்டு 2055 / குரோத் / ஆவணி – 122024 ஆகஸ்ட் 28 (புதன் கிழமை) இடம் : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அலுவலகக் கூட்ட அரங்கம். குறளகம் இரண்டாம் தளம், சென்னை 108. பயிற்சி நிரல் மு.ப.10.00 – 10.30 வருகைப் பதிவு வரவேற்புரைதிருமதி. வே. சாந்தி கண்காணிப்பாளர் தொடக்கவுரைமுனைவர் […]

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வரிசையில், சமூக நீதிக்காக அரும்பாடுபட்ட தலைவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவரும், தமிழுக்கு செம்மொழி தகுதியினைப் பெற்றுத் தந்தவரும், தனது எழுத்து மற்றும் பேச்சுக்களின் மூலம் […]

பிரிவுகள்