செய்திகள்

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை மயிலாடுதுறை மாவட்டம் 2024 2025
2024-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி
அய்யன் திருவள்ளுவர் திருநாள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.1.2025) திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், […]

சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகள்

கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கி, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் […]

அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் (தமிழ்) – மக்கள் பதிப்பு வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு வே.ராஜாராமன். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை […]

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பாக செயற்பட வாழ்த்து

அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3,44,41,750/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,50,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) வழங்கப்பட்டதோடு, மாண்புமிகு […]

பிரிவுகள்