தமிழறிஞர்கள் ஒன்பதின்மரின் நூல்கள் நாட்டுடைமையாக்கம் – நூலுரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களால் 2024-25ஆம் ஆண்டிற்கு 9 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத்தொகை(ரூபாய் 90.00 இலட்சம்) வழங்கப்படவுள்ளது. தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை. சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 179 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 14.42 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் […]
ஆலோசனைக் கூட்டம்
நேற்று (28.10.24) செவ்வாய்க்கிழமைதலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு மு பெ சாமிநாதன் அவர்கள் தலைமையில் பேரறிஞர் அண்ணா நினைவிட வளாகத்தில் திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசு செயலாளர் திரு வே இராஜாராமன் இ. ஆ. ப. பேராசிரியர் திரு சுப வீரபாண்டியன் பத்திரிகையாளர் திரு பதிருமாவேலன் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் […]
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் புதிய அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.
தமிழ் வளர்ச்சித் துறையில் 2024 -25- ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகள் மற்றும் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து துறை அலுவலர்களுடன் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை(23.10.24,) ஆய்வு நடத்திய தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். உடன், துறையின் செயலர் வே.ராஜாராமன், இயக்குநர் ந.அருள்.