செய்திகள்

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கிருட்டினகிரி மாவட்டம் 2024-2025
சிறந்த நூலாசிரியர் மற்றும் பதிப்பக விருது வழங்கும் விழா-2023

07.02.2025 அன்று சென்னையில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் பரிசு வழங்கப்பட்ட விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் எமது பதிப்பக நூலாசிரியர் திருப்பதிசாமி அவர்களுக்கும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பொதுமேலாளர் சண்முகநாதன் அவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள், செயலாளர் வெ.ராஜாராமன் இ.ஆ.ப. ஆகியோர் கலந்துகொண்டனர்.

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் பரிசு வழங்கும் விழா

இன்று (07.02.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 2023- ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தாரர்களுக்கு பரிசு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் […]

ஆய்வும் -செயலாக்கமும்

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை 7.2.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு‌. பிரபாகர் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கியதோடு அவரது முன்னிலையில் வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை திருப்பூர் மாவட்டம் 2024 2025
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நாமக்கல் மாவட்டம் 2024 2025

பிரிவுகள்