செய்திகள்

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டமன்றப் பேரவைச் செயலக அலுவலகத்திற்கான சுழற்கோப்பையை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் வழங்கினார்.

ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டமன்றப் பேரவைச் செயலக அலுவலகத்திற்கான சுழற்கோப்பையை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் சட்டமன்றப் பேரவைச் செயலக அரசு முதன்மைச் செயலாளர் திரு. கி. சீனிவாசன் அவர்களிடம் இன்று (23.08.2024 வெள்ளிக்கிழமை) வழங்கினார் தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழிச் சட்டத்திற்கிணங்க அரசின் நிருவாக மொழியாகத் தமிழ்மொழி இருந்து வருகிறது. ஆட்சிமொழிச் சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பெற்றுள்ள அரசாணைகளின்படி, அரசின் அனைத்துத் துறைகள், வாரியங்கள்,கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் […]

2024-ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர் விருது’ இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2024) சுதந்திரத் திருநாளையொட்டி, சென்னை தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற தேசியக் கொடியேற்று விழாவில், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியதற்காக 2024-ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருதினை இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், 2021ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டவாறு தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ‘தகைசால் தமிழர் […]

அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை அரசாணை வழங்கும் விழா

திருவள்ளுவராண்டு 2055, ஆடித் திங்கள் 22-ஆம் நாள்07.08.2024புதன்கிழமை,காலை 11.00 மணி இடம் : சென்னைப் பல்கலைக்கழக வளாகம், தந்தை பெரியார் அரங்கம்-எப்- 50 (முதல் தளம்) சேப்பாக்கம், சென்னை 600 005. நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை :முனைவர் ஔவை அருள் இயக்குநர்,தமிழ் வளர்ச்சித் துறை தொடக்கவுரை திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அரசு செயலாளர்,தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை விழாப்பேருரை :மாண்புமிகுதிரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள்தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் நன்றியுரை […]

பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை / கட்டுரை / பேச்சுப் போட்டி

நாள் : திருவள்ளுவராண்டு 2054. ஆடி-1127.07.2023 (வியாழக்கிழமை) இடம்:லேடி வில்லிங்டன் பள்ளி. திருவல்லிக்கேணி

தமிழ் வளர்ச்சி,கலைப்பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறையின் 3 ஆண்டு சாதனைகள் மற்றும் கையேடு புத்தகம் வெளியிடுதல்

தொடர்பாக தலைமைச் செயலகத்தில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் வியாழக்கிழமை(1.8.24) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் துறைச் செயலர் வே.ராஜாராமன், அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் கவிதா ராமு,தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ந.அருள்,கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் எஸ்.ஆர்.காந்தி..

தகைசால் தமிழர் விருதிற்கு திரு. குமரி அனந்தன் அவர்கள் தேர்வு

சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தின்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்படும். தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், தகைசால் தமிழர் என்ற விருதை உருவாக்கவும், இந்த விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021-សំ ஆணையிட்டிருந்தார்கள். இந்த விருதினை கடந்த 3 ஆண்டுகளில்திரு. சங்கரைய்யா அவர்கள், திரு.ஆர். நல்லகண்ணு மற்றும் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்விருதிற்கான […]

பிரிவுகள்