திருவள்ளுவர் திருநாள் விருதுகள்

திருவள்ளுவர் திருநாள் விருதுகள்

தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் தைத்திங்கள் 2-ஆம் நாளான திருவள்ளுவர் திருநாளில் நிகழ்த்தப்பெற்று வருகிறது. இவ்விழாவில், தமிழின் பெருமையை நிலைநிறுத்துவதோடு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்திடும் வகையில் தம் வாழ்நாளெல்லாம் தமிழ்ப்பணியாற்றிவரும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் பின்வரும் விருதுகள் தொடர்ந்து வழங்கப்பெற்று  வருகின்றன

1. திருவள்ளுவர் விருது (1986 முதல்)


திருக்குறள் நெறிபரப்பும் பெருந்தகையாளர்களில் ஒருவருக்கு திருவள்ளுவர் திருநாள் விழாவில் திருவள்ளுவர் விருது வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை  உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

2. மகாகவி பாரதியார் விருது (1997 முதல்)


 

பாரதியாரின் படைப்புகள் அனைத்தையும் முழுமையாகப் பயின்று ஆய்வு மேற்கொண்டு பாரதியாரைப் பற்றிய கவிதைகள் மற்றும் பாரதியின் புகழ்பரப்பும் வகையில் கவிதை, உரைநடை நூல்கள் படைத்தோர், பிறவகையில் தொண்டு செய்தோர், செய்பவர்களுக்கு மகாகவி பாரதியார் விருது வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை  உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

3. பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்)


 

சிறந்த கவிஞர் ஒருவருக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை  உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

4. தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்)


 

இவ்விருது சிறந்த தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு வழங்கப்பெறுகிறது. (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

5. கி.ஆ.பெ. விசுவநாதம் விருது (2000 முதல்)


 

இவ்விருது சிறந்த தமிழ் அறிஞர் ஒருவருக்கு வழங்கப்பெற்று வருகிறது. (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

6. பெருந்தலைவர் காமராஜர் விருது (2006 முதல்)


 

தெருவெங்கும் பள்ளிகள் திறந்து, இலவசக் கல்வித்திட்டம், சத்துணவுத் திட்டம் ஆகிய திட்டங்கள் மூலமாக தமிழ்ச் சமுதாயம் கல்வி என்னும் கைவிளக்கு ஏந்தி முன்னேற வழிவகுத்த வரலாறு படைத்த பெருந்தகையாளர் அவர்களின் அடிச்சுவட்டில், தமிழக மக்களுக்கு தொண்டாற்றிவரும் ஒருவருக்கு பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்படும். (விருதுத்தொகை  உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

7. பேரறிஞர் அண்ணா விருது (2006 முதல்)


 

தமிழ் சமுதாயம் முன்னேற்றம் காண அயராது பாடுபடும் ஒருவருக்கு அண்ணா விருது வழங்கப்பெறும். (விருதுத் தொகை உரூ.2.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)