ஆட்சிமொழித் திட்டத்தைச் சிறப்பாகச் செயற்படுத்தும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பணியாளர்களுக்கென ஆட்சிமொழிக் கருத்தரங்குகள் ஆண்டுதோறும் நடத்தப்பெற்று வருகின்றன. இதில் அரசுத்துறைகள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டு ஆட்சிமொழித்திட்டம் தொடர்பாக அறிஞர் பெருமக்களின் அனைத்து விளக்கங்களையும் ஐயந்திரிபறப் பெறுகின்றனர்.
ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடத்திட மாவட்டத்திற்கு ரூபாய் 20,000/- வீதம் 32 மாவட்டங்களுக்கு ரூபாய் 6,40,000/-ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, செவ்வனே நடத்தப்பெற்று வருகின்றது.