சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு

தமிழில் புதிய படைப்புகள் வெளிவரவும் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழக அரசால் ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பின்வரும் 33 வகைப்பாடுகளில் போட்டிக்கு நூல்கள் பெறப்படுகின்றன. இவற்றில் வகைக்கு ஒரு சிறந்த நூல் தெரிவு செய்யப்பெற்று அந்நூலாசிரியருக்குப் பரிசுத் தொகையாக ரூபாய் 30,000/- மற்றும் சான்றிதழும் அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்குப் பரிசுத் தொகையாக ரூபாய் 10,000/- மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகின்றன:-

1. சிறுவர் இலக்கியம்
2. மரபுக்கவிதை
3. புதுக்கவிதை
4. புதினம்
5. சிறுகதை
6. நாடகம் (உரைநடை, கவிதை)
7. திறனாய்வு
8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
9. பிற மொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10. நுண் கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11. அகராதி, கலைக்களஞ்சியம், கலைச்சொல்லாக்கம், ஆட்சித் தமிழ்
12. பயண இலக்கியம்
13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14. நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிகவழிகளும், அகழாய்வு
15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16. பொறியியல், தொழில் நுட்பவியல்
17. மானுடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18. சட்டவியல், அரசியல்
19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
20. மருந்தியல், உடலியல், நலவியல்
21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்த மருத்துவம், ஆயுர்வேதம்)
22. சமயம், ஆன்மிகம், அளவையியல்
23. கல்வியியல், உளவியல்
24. வேளாண்மையியல், கால்நடையியல்
25. சுற்றுப்புறவியல்
26. கணினியியல்
27. நாட்டுப்புறவியல்
28. வெளிநாட்டுத் தமிழ்ப் படைப்பிலக்கியம்
29. இதழியல், தகவல் தொடர்பு
30. பிற சிறப்பு வெளியீடுகள்
31. விளையாட்டு
32. மகளிர் இலக்கியம்
33. தமிழர் வாழ்வியல்