பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 125-ஆவது பிறந்த நாளையொட்டி 125 கவிஞர்களைக் கொண்டு, ஐந்து இலட்சம் ரூபாய் செலவில் இரண்டு நாள்கள் கவியரங்கம் நடத்தப்படும் எனவும் ஆண்டுதோறும் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29 அன்று ‘தமிழ்க் கவிஞர் நாள்’ என்ற பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் 2015-16ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. 2016-17ஆம் ஆண்டிற்கான விழா திருவள்ளூரில் 28.3.2017 மற்றும் 29.3.2017 ஆகிய நாள்களில் 125 கவிஞர்களைக் கொண்டு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதே போன்று 2017, 2018, 2019 ஆம் ஆண்டுகளிலும் சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கொண்டாடப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கொரனா தீநுண்மித் தொற்று காரணமாக அரசு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டமையால் தமிழ்க் கவிஞர் நாள் விழா நடத்தப்பெறவில்லை. 2021 ஆம் ஆண்டில் தீநுண்மி தொற்றுநோய் காரணமாக இணைய வழி நிகழ்ச்சியாக நடத்தப்பெற்றது.