தமிழில் சிறந்த நூல்கள் வெளியாவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் நூலாசிரியர்களுக்கு நூல் வெளியிட நிதியுதவி வழங்கும் திட்டம் தொடர்ந்து செயற்படுத்தப்படுகிறது. சிந்தனைத் திறன்மிக்க எழுத்தாளர்கள் தம் அரிய
படைப்புகளைப் பதிப்பிக்க முடியாமல் பொருளாதாரச் சிக்கலால் திணறும் நிலையைப் போக்க இத்திட்டம் துணைபுரிகின்றது. அரசு அச்சக மதிப்பீட்டின்படி, நூலின் அச்சுச் செலவில்
60 விழுக்காடு தொகை அல்லது ரூபாய் 50,000/- இவற்றில் குறைவான தொகை நூலாசிரியருக்கு நிதியுதவியாக இரு தவணைகளில் வழங்கப்படுகிறது.