மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டபொழுது தமிழ்நாட்டின் எல்லையைக் காக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகிறது. இவர்களின் மறைவுக்குப்பின் இவர்களின் மரபுரிமையர்களுக்கும் நிதியுதவித் தொகை வழங்கப்படுகிறது.
திங்கள்தோறும் உதவித் தொகை வழங்கப்படும் விவரம்
அ) எல்லைக் காவலர் ரூபாய் 5,500/- + ரூபாய் 500/- மருத்துவப்படி
ஆ) மரபுரிமையர் ரூபாய் 3,000/- + ரூபாய் 500/- மருத்துவப்படி
இத்திட்டத்தின்கீழ் தற்போது உதவித்தொகை பெற்று வரும் எல்லைக் காவலர் / மரபுரிமையர் எண்ணிக்கை
அ) எல்லைக் காவலர்கள் 404 பேர்
ஆ) எல்லைக் காவலர்களின் 260 பேர் மரபுரிமையர்கள்
——-
மொத்தம் 664 பேர்
——-
மேலும், இவர்கள் தடையின்றித் தமிழ்நாடு முழுவதும் பயணித்துத் தமிழ்ப் பணியாற்ற ஏதுவாக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கட்டணமில்லாப் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இச்சலுகை காரணமாக எல்லைக் காவலர்களும் அவர்தம் மரபுரிமையரும் எண்ணம் போல் தமிழ்வண்ணம் காத்திட இயலும் என்பது திண்ணம்.