செய்திகள்

33 சிறந்த நூல்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு

2022-ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் (11.07.2024) சென்னை, இராஜா அண்ணாமலை புரம், டி. ஜி. எஸ். தினசரன் சாலை (இசைக் கல்லூரிச் சாலை)யில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக செயற்படுத்தப்படும் […]

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முனைவர் மா.நன்னன் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமை பரிவுத் தொகையான ரூ. 10 இலட்சத்திற்கான காசோலையை அவரின் துணைவியார் அவர்களிடம் வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள், ஒரிசா மாநிலம் புவனேஸ்வர் தமிழ் சங்கத்தில் தமிழ் மொழியை கற்பிக்க வகுப்பறைகள் மற்றும் கட்டட விரிவாக்க பணிகளுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ரூபாய் 15 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இராணிப்பேட்டை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களால் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு தொகைக்கான காசோலை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.