தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு . மு.பெ.சாமிநாதன் அவர்கள் துறையின் சார்பாக பல்வேறு விருதுகளை வழங்கினார்
இன்று (07.01.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்த்தாய் விருது – தென்காசித் திருவள்ளுவர் கழகம், கபிலர் விருது – கவிஞர் முத்தரசன், உ.வே.சா விருது – முனைவர் ஆ. இராமநாதன், கம்பர் விருது – முனைவர் ம.பெ. சீனிவாசன், சொல்லின் செல்வர் […]