Category Archives: சென்னை

மொழிப்போர் தியாகிகள் திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரது புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திறந்து வைப்பு-

“சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து-நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச் சிலை நிறுவப்படும்” மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25.1.2025) தமிழ்மொழி தியாகிகள் நினைவு நாளையொட்டி, சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்துறந்த திருவாளர்கள் தாளமுத்து நடராசன் ஆகியோரின் நினைவிடம் 34 இலட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைத்தார். தமிழ் மொழி, நீராலும் – நெருப்பாலும், […]

அய்யன் திருவள்ளுவர் திருநாள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.1.2025) திருவள்ளுவர் திருநாளையொட்டி சென்னை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், […]

அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் (தமிழ்) – மக்கள் பதிப்பு வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு வே.ராஜாராமன். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை […]

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 53- ஆவது ஆளுகைக் குழுக் கூட்டம்

ஆளுகைக்குழுக்கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 53- ஆவது ஆளுகைக் குழுக் கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் 07.01.2025 செவ்வாய்க்கிழமையன்று சென்னை, தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் […]

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்துப் படைப்புகள் நாட்டுடைமை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திருமதி.க.ராஜாத்தி அம்மாள் அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை அவர்களின் இல்லத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டது.  

தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிப்பு

தமிழ் வளர்ச்சித் துறை தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துச் சிறப்புச் செய்தல் 15.07.2024 தனிப்பெரும் தமிழ் மாமலை மறைமலையடிகளார் தமிழகப் புலவர் பெருமக்களுள் மறைத்திரு மறைமலையடிகளார், தனித்தமிழ்த் தந்தையாக மட்டுமின்றித் தனித்திறம் படைத்த பல்கலைப் பேரறிஞராக விளங்கினார். தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மும்மொழிகளில் வல்லுநராகத் திகழ்ந்த அடிகளார் சமயம், சமுதாயச் சீர்திருத்தம் நலத்துறை ஆகிய மக்களுக்கு இன்றியமையாது வேண்டப்படும் துறைகளிலும் தமது அறிவாற்றலைச் செலுத்தி அரிய பல நூல்களைத் […]

33 சிறந்த நூல்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை பரிசு

2022-ஆம் ஆண்டில் தமிழில் சிறந்த நூல்களைப் படைத்த நூலாசிரியர்கள் மற்றும் நூல்களைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் (11.07.2024) சென்னை, இராஜா அண்ணாமலை புரம், டி. ஜி. எஸ். தினசரன் சாலை (இசைக் கல்லூரிச் சாலை)யில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் பரிசு வழங்கப்பட்டது. தமிழ்மொழியில் சிறந்த நூல்கள் வெளிவருவதை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக செயற்படுத்தப்படும் […]

சென்னை மாவட்டம் – பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி யில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசும் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.