உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களின் தொடர் முயற்சியால் மதுரை, உலகத் தமிழ்ச் சங்கம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சங்க விதிகளின்படி புதுப்பிக்கப்பெற்றது. மதுரையில் 1981இல் நடைபெற்ற ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் உலகத் தமிழ்ச் சங்கம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு 1986இல் மேனாள் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பெற்றது. மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி […]