அம்மா மென்தமிழ் மென்பொருள் நிறுவுதல்
கணினியில் ஆங்கில மொழிக்கெனப் பிழை திருத்தி, சொல் திருத்தி வசதிகள் இருப்பதைப்போல், தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி எழுதத்தக்க வகையிலும், தவறுகளைத் தானே சுட்டிக்காட்டித் திருத்திக் கொள்ளும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது
தேவைகள்:
வன்பொருள்: 1. குறைந்தபட்சம் 1 ஜிபி ராம் (RAM), 2. ஜிபி வன்தட்டு (Hard Disk)
மென்பொருள்: விண்டோஸ் எக்ஸ்பி, 7, 8, 10 இயங்கு தளம், விண்டோஸ் நிறுவி (Installer), மைக்ரோசாஃப்ட் .நெட் ஃப்ரேம்வொர்க் 4 (.Net Framework 4)
தானியங்கு நிறுவுதல் முறையில் அம்மா மென்தமிழ் மென்பொருள் நிறுவப்படும்
1. குறுவட்டு இயக்கியில் (CD Drive) குறுவட்டைச் செருகவும்.
2. அது தானே இயங்கி, அடுத்து மேலே செயல்படலாமா என்று கேட்கும்.
3. Run Amma Mentamizh என்ற மென்தமிழ் விருப்பத்தேர்வைச் சொடுக்கினால் போதும்.
4. இப்போது நிறுவுதல் வழிகாட்டி (Installation Wizard) திறக்கும்.
5. “Next“ பொத்தானைச் சொடுக்கி, மென்தமிழ் உரிம ஒப்பந்தத்தை ஏற்றுச் சொடுக்கினால்
போதும்.
6. இப்போது அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் நிறுவப்படும்;
7. அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் நிறுவப்பட்டவுடன், அடுத்து அம்மா மென்தமிழ்
விசைப்பலகை நிறுவுதல் வழிகாட்டி தோன்றும்.
8. “Next“ பொத்தானைச் சொடுக்கி, மென்தமிழ் விசைப்பலகை உரிம ஒப்பந்தத்தை ஏற்றுச்
சொடுக்கினால் போதும்.
9. நிறுவுதலின் “Complete“ வகையைத் தேர்ந்தெடுத்து, “Install“ பொத்தானைச் சொடுக்கவும்.
10. இப்போது அம்மா மென்தமிழ் விசைப்பலகை அமைப்பு (Setup) நிறுவப்படும்.
11. பின், அம்மா மென்தமிழ் எம் எஸ் ஆஃபீஸ் உட்செருகி நிறுவுதல் தொடங்கும்.
12. முன்னர்க் கூறிய முறைகளின்படி, “Next“ பொத்தானைச் சொடுக்கி, மேலே செயற்படுத்தவும்.
13. நிறுவுதல் செயல்முறை நிறைவடைய “Complete“ பொத்தானைச் சொடுக்கவும்.
14. கணினியில் அம்மா மென்தமிழ் மென்பொருள் வெற்றிகரமாக நிறுவப்பட்டது. “Finish“
பொத்தானைச் சொடுக்கவும்.
15. இப்போது அம்மா மென்தமிழ் மென்பொருள் செயல்படத் தயாராகவுள்ளது.
இடர் களைவு (Trouble Shooting):
நிறுவும்போது இடர்ப்பாடு. நேரிட்டால், கணினியில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள கோப்புகள் ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கின்றனவா என்று சரிபார்க்கவும்;
I) .Net Framework 4.0, II) Windows Installer 4.5, III) Tamil Language Supporting Files
நிறுவுதலுக்கு இந்தக் கோப்புகள் தேவைப்பட்டால், எமது குறுவட்டிலுள்ள Windows_XP_2000_2003 என்ற கோப்புறையிலிருந்து பெறலாம்;
மேலும், NOTES_WINDOWS_XP_2000_2003.txt file என்ற கோப்பை நோக்கவும்..
தேவையான கோப்புகளை நிறுவி, அதன்பின்னர் அம்மா மென்தமிழ் மென்பொருளை
மீண்டும் நிறுவத் தொடங்கவும்.
அம்மா மென்தமிழ் மென்பொருள் செயல்படுத்தம்
அம்மா மென்தமிழ் மென்பொருளைச் செயல்படுத்த:
1. அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் வலப்பக்கத்தின் மேல் ஓரத்தில் தென்படும் Trial Edition–ஐச்
சொடுக்கவும்.
2. இப்போது அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர் வழிகாட்டி (Activation Wizard) தோன்றும்
அ. இணைய வழியில் அம்மா மென்தமிழ் மென்பொருளைச் செயல்படுத்த:
i. (பரிந்துரைக்கப்பட்ட) Activate Online–ஐத் தேர்ந்தெடுத்து, Next-ஐச் சொடுக்கவும்.
ii. இப்போது இணையவழி செயல்படுத்தும் படிவம் (Online Activation form) தோன்றும்.
iii கட்டாயமான புலங்களை நிரப்பி, Activate பொத்தானை அழுத்தவும்.
ஆ. மின்–அஞ்சல்வழி அம்மா மென்தமிழைச் செயல்படுத்த;
i. ( இரு வணிகமுறை நாட்களுக்குள் – Business days) Activate by Email–ஐத்
தேர்ந்தெடுத்து, Next–ஐச் சொடுக்கவும்.
ii. இப்போது இணைய வழி இல்லாமல் செயல்படுத்துவதற்கான படிவம்
(Manual Activation form) தோன்றும்.
iii. மின்-அஞ்சல்வழி செயல்படுத்த, அந்தப் படிவத்திலுள்ள வழிமுறைகளைப்
பின்பற்றவும்.
அம்மா மென்தமிழ் விசைப்பலகைகள் மென்பொருளைச் செயல்படுத்த;
1. இடுபணிப்பட்டையில் (Taskbar), “MT“ என்ற அம்மா மென்தமிழ் விசைப் பலகைகள்
படவுருவினை (Icon) வலப்புறமாகச் சொடுக்கி, Amma MenTamizh Keyboard Settings –ஐ
இடப்புறமாகச் சொடுக்கவும்.
2. Amma MenTamizh Keyboard Configuration சாளரம் தோன்றும்.
அதில், Support தத்தலைச் (Tab) சொடுக்கி, Enter License Key பொத்தானைச்
சொடுக்கவும்.
3. இப்போது Activation படிவம் தோன்றும்.
4. அதில், License Keyஐ உள்ளீடு செய்து, Activate பொத்தானை அழுத்தவும்.
தொழில்நுட்ப உதவிக்கு என்டிஎஸ் லிங்சாப்ட் சொலூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்-ஐத் தொடர்புகொள்ளவும்;
தொலைபேசி: 044–4201 9993/044–2491 2526
அலைபேசி: 98418 16547/ 80560 22611/ 97890 59414
மின்–அஞ்சல்: contact@lingsoftsolutions.com / ndslingsoft@gmail.com
இணையவழி உதவிக்கு, ( இணையத்திலிருந்து பதிவிறக்கப்படக்கூடிய ) டீம்வியூவர் 12
(Team viewer12) – ஐக் கணினியில் நிறுவிக்கொள்ளவும்.