செய்திகள்

ஈரோடு மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம்/கருத்தரங்கம் இரண்டாம் நாள் நிகழ்ச்சி. ஆட்சிமொழித்திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்திற்குக் கேடயம் வழங்கப்பெற்றது.

ஈரோடு மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம்/கருத்தரங்கம் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் ப.அன்புச்செழியன் அவர்கள் ஆட்சிமொழி ஆய்வும் குறைகளைவு நடவடிக்கைகளும் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர் நிகழ்வாக தமிழ் துறைத் தலைவர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்களின் இணையத்தமிழ் வகுப்பு நடைபெற்றது. புலவர் ப.ஆறுமுகம் ஐயா அவர்களின் மொழிப்பெயர்ப்பு/கலைச்சொல்லாக்கப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆட்சிமொழித்திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட சமூக நல அலுவலகத்திற்குக் கேடயம் வழங்கப்பெற்றது.