செய்திகள்

திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்த மாண்புமிகு அமைச்சர்கள் தமிழ் வளர்ச்சி இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்

தமிழக அரசின் சார்பில் 15.01.2021. அன்று திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அன்னாரது சிலைக்கு –  தமிழ் ஆட்சி மொழி, தமிழ்ப்பண்பாடு மற்றும் தொல்லியல்துறை அமைச்சர்- திரு. கே. பாண்டியராஜன் அவர்கள், மீன்வளம் பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் – திரு. டி . ஜெயக்குமார் அவர்கள்,  தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் மற்றும் உலக தமிழாராய்ச்சி இயக்குநர் – முனைவர் கோ.விசயராகவன்           அவர்கள், அரசுச் செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை – திரு.மகேசன் காசிராஜன், இ.ஆ.ப., அவர்கள் , தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர் (நிருவாகம்) – திரு.ம.சி.தியாகராசன் அவர்கள் ,  மற்றும் தமிழறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்கள்.