செய்திகள்

திருச்சியில் மாணவர்கள் பேரணி – துணை இயக்குநர் (நிருவாகம்) திரு.ம.சி.தியாகராசன் கலந்துகொண்டார்

திருச்சியில் இன்று சையது முஸ்தபா பள்ளி , டவுன் ஹால் பெண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் ஈபி மாநகராட்சி  பள்ளியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் , மற்றும் தமிழ் அமைப்புகள் , தமிழ் அறிஞர்கள் தமிழ் வளர்ச்சி துறையினருடன் இணைந்து தமிழ் மொழியின் பெருமையை உணர்த்தும்வண்ணம்  வணிகர்களே பெயர் பலகையை தமிழில் வைத்திடுங்கள் ,தாய்மொழியை போற்றுங்கள் வாழ்க தமிழ் வெல்க தமிழ் என்று முழக்கம்யிட்டனர் 

பேரணியை வருவாய் கோட்ட அலுவலர் திரு விஸ்வநாதன் கொடியசைத்து துவங்கி வைத்தார் .பேரணி ஒருங்கிணைப்பாளர் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் மற்றும் பணியாளர்கள் . கோட்டை காவல் துறையினரும் ஒத்துழைப்பு நல்கினர் .