செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெறும் சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப்போட்டிக்கு 2018ஆம் ஆண்டில் (01.01.2018 முதல் 31.12.2018 வரை) வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன.

செய்திக் குறிப்பு

தமிழ் வளர்ச்சித் துறையால் நடத்தப்பெறும்  சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப்போட்டிக்கு 2018ஆம் ஆண்டில் (01.01.2018 முதல் 31.12.2018 வரை)  வெளியிடப்பட்ட நூல்கள் 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன.  போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30,000/-ம் அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10,000/-ம் என பரிசுகள் வழங்கப்பெறும்.  பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள்   கீழ்க்குறிப்பிட்ட  முகவரியில் நேரிலோ,  அஞ்சல் வாயிலாகவோ  இத்துறையின் வலைதளத்திலோ (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

தமிழ்வளர்ச்சி இயக்குநர்,

தமிழ்வளர்ச்சி வளாகம்  முதல் தளம்,

தமிழ்ச்சாலை, எழும்பூர்,

சென்னை 600 008.

தொலைபேசி எண்கள். 28190412 ,  28190413

அஞ்சல் வாயிலாகப் பெற 23X10 செ.மீ அளவிலான சுய முகவரியிட்ட உறையில்  10 ரூபாய் அஞ்சல்வில்லை ஒட்டி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

போட்டிக்கான விண்ணப்பத்துடன் 10 நூற்படிகளும் போட்டிக் கட்டணம் ரூ.100/- கேட்புக் காசோலையாக `தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை என்ற பெயரிலோ அல்லது அலுவலகத்தில் நேரிலோ செலுத்தி அதற்கான செலுத்துச்சீட்டினையும் அளிக்க வேண்டும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் 31. 7 .2019