செய்திகள்

2018 – ஆம் ஆண்டு ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ் வளர்ச்சித் துறை

ந.க.எண். 9501 / வ.செ.1/18 திருவள்ளுவராண்டு 2049 / விளம்பி / கார்த்திகை – 7
நாள் 23.11.2018

செய்தி வெளியீடு

கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’ ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வழங்கப்படுகிறது. விருது பெறுபவர்க்கு விருதுத் தொகை ரூ.1,00,000/- மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் இவ்வகையில், 2018 – ஆம் ஆண்டு ‘முதலமைச்சர் கணினித் தமிழ் விருது’-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்குரிய மென்பொருள்கள் 2015, 2016, 2017ஆம் ஆண்டுகளுக்குள் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்கு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 31.12.2018

அனுப்ப வேண்டிய முகவரி

தமிழ் வளர்ச்சி இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி வளாகம்,
தமிழ்ச் சாலை,
எழும்பூர்,
சென்னை – 600 008.
தொடர்பு எண்: 044-28190 412 | 044-28190413
மின்னஞ்சல்: tamilvalarchithurai@gmail.com