செய்திகள்

பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

போட்டி விதிமுறைகள்

1. போட்டிகளில்  கலந்து  கொள்ளும்  மாணவ,  மாணவிகள்  போட்டி  நாளன்று 9.00 மணிக்குள்  தங்கள்  வருகையை  பதிவு  செய்திடல்  வேண்டும்.
2. இப்போட்டிகளில்  கலந்து  கொள்ளும்  மாணவர்கள்  இத்துடன்  இணைக்கப்பட்டுள்ள  படிவத்தை  நிறைவு  செய்து பள்ளித் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர்  பரிந்துரையுடன்  போட்டி  தொடங்கும்  முன்பு  தமிழ்  வளர்ச்சித் துணை/உதவி  இயக்குநரிடம் நேரில் அளிக்கப்பட  வேண்டும்.
3. ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 பேரை மட்டும் தெரிவு செய்து பள்ளித் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர் போட்டிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
4. ஒரு மாணவர்  ஒரு  போட்டியில்  மட்டுமே கலந்து  கொள்ள  வாய்ப்பு  அளிக்கப்படும்.
5. இதற்கு முன்பு இப்போட்டிகளில் பங்கேற்று ஒரு மாணவர் / மாணவி தொடர்ந்து ஒரே போட்டியில் பங்குபெற்று இரண்டு முறை பரிசுகள் பெற்றிருப்பின் மீண்டும் அதே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்.
6. போட்டிகள் காலை 10.00 மணியளவில் தொடங்கும்
7. மாவட்ட  அளவிலான  பரிசுத்  தொகை       முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு  கவிதைப் போட்டி – ரூ.10,000/- ரூ.7,000/- ரூ.5,000/-  கட்டுரைப் போட்டி – ரூ.10,000/- ரூ.7,000/- ரூ.5,000/-  பேச்சுப் போட்டி – ரூ.10,000/- ரூ.7,000/- ரூ.5,000/-
8. கவிதை, கட்டுரைப் போட்டியில்  கலந்து  கொள்ளும்  மாணவர்களுக்கு  வெள்ளைத்  தாள்  வழங்கப்பெறும்.
9. போட்டிகளில்  கலந்து  கொள்ளும்  மாணவர்களுக்குத்  தேநீர்,  மதிய  உணவு  வழங்கப்  பெறும்.
10. போட்டிகளுக்கானத்  தலைப்புகள்  பங்கேற்கும்  மாணவர்களுக்கு  முன்னதாகவே  தெரிவிக்கப்படமாட்டாது.  நடுவர்கள்  மற்றும்  மாணவர்கள்  முன்னிலையில்  போட்டி நடைபெறும்  நேரத்  தொடக்கத்தில்  தமிழ்  வளர்ச்சி  இயக்குநரால்   அனுப்பப்பட்ட மூடி முத்திரையிட்ட உறை  பிரிக்கப்பட்டு  தலைப்பு  மாணவர்களுக்குத்  தெரிவிக்கப்பெறும்.
11. மூன்று போட்டிகளும் ஒரே  நாளில்  நடத்தப்பெற்று  முடிவுகள்  அன்றே  அறிவிக்கப்படும்.
12. போட்டியில் கலந்து  கொள்ளும்  மாணவர்களுக்குப் பயணப்படி ஏதும் வழங்கப்பட  மாட்டாது.
13. மாநில அளவிலான போட்டிகள் பற்றிய விவரம் சென்னை, தமிழ் வளர்ச்சி இயக்குநரால் பின்னர் அறிவிக்கப்பெறும்.
14. மாநில  அளவிலான  பரிசுத்  தொகை       முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு  கவிதைப் போட்டி – ரூ.15,000/- ரூ.12,000/- ரூ.10,000/-  கட்டுரைப் போட்டி – ரூ.15,000/- ரூ.12,000/- ரூ.10,000/-  பேச்சுப் போட்டி – ரூ.15,000/- ரூ.12,000/- ரூ.10,000/-

விண்ணப்ப படிவம்

தமிழ்  வளர்ச்சி  இயக்குநர்