செய்திகள்

உலகத்திலுள்ள தமிழ்ச்சங்க அமைப்புகளுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் அன்பான வேண்டுகோள்

உலகத்திலுள்ள (தமிழ்நாடு, பிறமாநிலங்கள், அயலகம்) தமிழ்ச்சங்க
அமைப்புகளுக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் அன்பான வேண்டுகோள்
——

தமிழ் இலக்கியம், தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைப் பேணிக்காப்பதோடு தமிழர்களையும் தமிழர் நலன்களையும் காக்கத் தங்களால் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புக்குத் தமிழ் வளர்ச்சித் துறையின் மனமார்ந்த வாழ்த்துகள், பாராட்டுகள்.

உலகம் முழுமையுமுள்ள தமிழ்ச் சங்கங்கள் / அமைப்புகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் பொருட்டு தங்கள் அமைப்புகள் பற்றிய முழு விவரங்களைக் கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் நிறைவு செய்து தமிழ் வளர்ச்சித் துறையின் மின்னஞ்சல் (tamilvalarchithurai@gmail.com) முகவரிக்கு உடன் அனுப்பிட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

திரு.  க. பாண்டியராசன்
தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப்பண்பாடு
மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
தமிழ்நாடு அரசு

                                  

தமிழ்ச் சங்கங்கள் / அமைப்புகள் ஒருங்கிணைக்கும் விண்ணப்பப் படிவம்