செய்திகள்

இலக்கியப் பட்டறை நிறைவு விழா

தமிழ்வளர்ச்சித் துறையால் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 16.07.2018 முதல் 22.07.2018 வரை நடைபெற்றது. இளந்தமிழர் இலக்கியப் பட்டறையின் நிறைவு நாள் (22.07.2018) விழாவில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராசன் அவர்கள் இலக்கியப் பட்டறை உரைத் தொகுப்பு நூலை வெளியிட்டும் மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். மேனாள் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், தமிழ்வளர்ச்சித் துணை இயக்குநர்கள் முனைவர் க.பசும்பொன், திரு.ம.சி.தியாகராசன் மற்றும் ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவர் திரு. சோலை மு.ராசா ஆகியோர் உடன் இருந்தனர்.