செய்திகள்

தமிழ்நாடு 50ஆம் ஆண்டுப் பொன்விழா – மாநில அளவிலான போட்டிகள் வெற்றிபெற்ற மாணவர்களின் விவரம்

தமிழ்வளர்ச்சித் துறை
தமிழ்நாடு 50ஆம் ஆண்டுப் பொன்விழா – மாநில அளவிலான போட்டிகள்
கல்லூரி மாணவர்களுக்குக் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
இடம் : மதுரை – நாள்: 21.07.2018

வெற்றிபெற்ற மாணவர்களின் விவரம்

கவிதைப் போட்டியில் திருவாரூர் மாவட்டம் திரு.வி.க.அரசுக் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு வேதியியல் .பயிலும் மாணவன் செல்வன் து.வே.யோகேசுவரன் முதல் பரிசையும் திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி (ம) ஆராய்ச்சி நிறுவனத்தில் இரண்டாமாண்டு இளங்கலை பயிலும் மாணவன் செல்வி பா.சக்தி சிவபிரியா இரண்டாம் பரிசையும் சென்னை து.கோ.வைணவக் கல்லூரியில் மூன்றாமாண்டு காட்சித் தொடர்பியல் பயிலும் மாணவன் செல்வன் ஸ்ரீ விவேக் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

கட்டுரைப் போட்டியில் கிருட்டினகிரி மாவட்டம் பருகூர் அரசு பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு இயந்திரவியல் முனைவர் ஆய்வுப்பட்டம் பயிலும் மாணவன் செல்வன் க.அருண்குமார் முதல் பரிசையும் திருவள்ளுர் தரும மூர்த்தி ராவ்பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்துக்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் மூன்றாமாண்டு .பயிலும் மாணவன் செல்வன் ப.தினேஷ்குமார் இரண்டாம் பரிசையும் கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் ஸ்ரீ கிருஷ்ணா கலை (ம) அறிவியல் கல்லூரியில் இளங்கலை நுண்ணுயிரியல் பயிலும் மாணவி செல்வி ச.மங்கையர்க்கரசி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

பேச்சுப் போட்டியில் காஞ்சிபுரம், அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாமாண்டு பயிலும் மாணவன் செல்வன் முனீஸ்வரன் முதல் பரிசையும் கிருட்டினகிரி அரசு மகளிர் கல்லூரியில் முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு பயிலும் மாணவி செல்வி சே.ஆனந்தஷைனி இரண்டாம் பரிசையும் நாகர்கோயில், மகளிர் கிருத்துவர் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவி செல்வி பி.வைஷ்ணா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

படச்செய்தி

தமிழ்வளர்ச்சித் துறையால் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் 21.07.2018ஆம் நாளன்று கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பெற்ற தமிழ்நாடு 50ஆம் ஆண்டு பொன்விழா கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் தமிழ்வளர்ச்சி இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன், தமிழ்வளர்ச்சித் துறை அலுவலர்கள் மற்றும் போட்டிகளில் பணியாற்றிய நடுவர்கள் .