செய்திகள்

தமிழ் அறிஞர் இராபர்ட் கால்டுவெல் பிறந்த நாள் விழா

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில் இன்று (10.5.2018) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை செயல்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன், தலைமைச்செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.இரா.வெங்கடேசன் இ.ஆ.ப., தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் க.பாஸ்கரன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் (பொறுப்பு) முனைவர் கோ.விசயராகவன், மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள், மதுரை உலக தமிழ் சங்கத்தின் இயக்குநர் முனைவர் கா.மு.சேகர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை கூடுதல் செயலாளர் திருமதி க.அன்னை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்