செய்திகள்

தமிழ்க் கவிஞர் நாள் விழா

இன்று (29.04.2018) மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு (ம) தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராசன் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணியில் நடைபெற்ற, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 127ஆவது பிறந்தநாளையொட்டி ‘தமிழ்க் கவிஞர் நாள் விழா’வில் 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். தடம்பதித்த தலைவர்கள் (நினைவுகளும் நினைவகங்களும்) என்ற  நூலுக்கான பரிசு நுhலாசிரியர் செய்தித்துறை கூடுதல் இயக்குநர் திரு. எஸ்.பி. எழிலழகன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அப்பரிசினை அவருடைய மனைவி திருமதி கோமதி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். அருகில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் திரு. இரா. வெங்கடேசன், இ.ஆ.ப., அவர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர். கோ. விசயராகவன், முனைவர் வி.ஜி.பி. சந்தோசம் அவர்கள், சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கிய துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர். ஒப்பிலா மதிவாணன் அவர்கள், கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் முனைவர் இரா. குணசேகரன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் ம.சி. தியாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.

இன்று (29.04.2018) மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு (ம) தொல்லியல் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராசன் அவர்கள், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணியில் நடைபெற்ற, பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 127ஆவது பிறந்தநாளையொட்டி ‘தமிழ்க் கவிஞர் நாள் விழா’வில் 2015ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களுக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். காலத்தை வென்ற காவிய மகளிர் என்ற நூலை பதிப்பித்த மணிமேகலை பிரசுரத்திற்கான பரிசினை திரு. லேனா தமிழ்வாணன் அவர்களும், பண்டைத் தமிழர் பண்பாடு ஒரு புதிய நோக்கு என்ற நூலை பதிப்பித்த குட்புக்ஸ் பப்ளிகேஷனுக்கான பரிசினை திரு. இரவி தமிழ்வாணன் அவர்களும் பெற்றுக்கொண்டனர். அருகில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர்

திரு. இரா. வெங்கடேசன், இ.ஆ.ப., அவர்கள், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர். கோ. விசயராகவன், முனைவர் வி.ஜி.பி. சந்தோசம் அவர்கள், சென்னை பல்கலைக் கழக தமிழ் இலக்கிய துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர். ஒப்பிலா மதிவாணன் அவர்கள், கலைப் பண்பாட்டுத்துறை இணை இயக்குநர் முனைவர் இரா. குணசேரன், தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் ம.சி. தியாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.